யாழ்ப்பாணத்தில் இன்று வெடிக்க போகும் மாபெரும் போராட்டம்
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக்கு எதிராக யாழில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த போராட்டமானது, இன்று (03) காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தையிட்டி - திஸ்ஸ விகாரை முன்றலில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
"அதிகாரத்திற்கும் அடக்குமுறைக்கும் எதிரான ஒலி" என்ற தொனியில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதற்கான அழைப்பு துண்டுபிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த போராட்டம்..
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர், யாழ். தையிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட அமைதி போராட்டத்தின் போது பொலிஸாரின் நடவடிக்கையால் பதற்றநிலை ஏற்பட்டது.

இதன்போது அங்கிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தாக்கப்பட்டதுடன் வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன், போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் அங்கிருந்து சென்றாலேயே கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்டவர்கள் பின்னர் பிணையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், வேலன் சுவாமிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், குறித்த நடவடிக்கைக்கு தமிழ் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் இன்று மீண்டும் சட்டவிரோத தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam
கரூரிலும் எகிப்திலும் உள்ள தமிழ் பெயர்; இரும்பை கண்டுபிடித்த தமிழன் - அமர்நாத் ராமகிருஷ்ணன் News Lankasri