ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை களமிறக்க தீவிர முயற்சி! பின்னணியில் பலம் வாய்ந்த அமைச்சர்
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை முன்னிறுத்துவதற்கான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கத்தில் முக்கிய பதவி வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் உட்பட பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் பலரும் இதற்கு வேரூன்றி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்தும் பணியை அரசாங்கத்தில் பலம் வாய்ந்த பதவி வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிரேஷ்ட அமைச்சர்களின் பொறுப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவியில் இருக்கும் போது அவரது தனிப்பட்ட ஊழியர்கள் சிலருடன் தொடர்பு கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்சரவை மற்றும் இராஜாங்க அமைச்சர்களில் பெரும்பாலான இளம் உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மயிலுக்காக கோமதியிடம் பேசிய மீனாவிற்கு ஏற்பட்ட நிலைமை, லஞ்சம் வாங்கிய செந்தில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam