நேபாளத்தில் மீண்டும் இயற்கையின் கோரத்தாண்டவம்! வெளியான பரபரப்பு காணொளிகள்..
இமயமலை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் 35க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளதுடன் அங்குள்ள நீர்மின் திட்டமும் சேதமடைந்துள்ளது.
நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் உள்ள சும்னுப்ரி கிராமத்தில் இன்று (11) இந்தத் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
திடீர் வெள்ளம்
புதிகண்டகி ஆற்றில் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகின்றது.
நேபாளத்தின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, இன்று காலை 6.30 மணியளவில் 3.66 மீற்றராகக் காணப்பட்ட ஆற்றின் நீர்மட்டம், காலை 8.40 மணியளவில் 8.43 மீற்றராக உயர்ந்துள்ளது.
🇳🇵 Nepal hit by ANOTHER flash flood Black, debris-filled water surged through the Budhigandaki River valley in Gorkha, eating up houses and bridges in its path It comes less than two months after a massive flood killed nearly 1,500 people with 5,000 still missing They just can't catch a break Writer: Ian https://t.co/1HBWykd03i
— Mario Nawfal (@MarioNawfal) October 11, 2026
ஆபத்து நிலையாக நிர்ணயிக்கப்பட்ட 5 மீற்றர் அளவையும் தாண்டி நீர்மட்டம் உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, காலை 8.30 மணி முதல் 8.40 மணி வரையிலான பத்து நிமிடங்களில் மாத்திரம் நீர்மட்டம் இரண்டு மீற்றருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
இதற்கிடையில், வெள்ளத்தின் தாக்கத்தினால் ஆற்றின் நீர்மட்டத்தை அளவிடும் கண்காணிப்பு நிலையமும் அதனுடன் இணைந்திருந்த பாலமும் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இதனால், மேலதிக தகவல்களைச் சேகரிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்புகள் பதிவு
பொதுவாக, அதிக மழைப்பொழிவு காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படும் நிலையில், இந்த வெள்ளம் மழையால் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மாறாக, ஆற்றின் நீரோட்டத்தில் ஏதேனும் ஒரு காரணத்தால் தடை ஏற்பட்டு, பின்னர் அந்தத் தடை உடைந்ததன் காரணமாகத் திடீர் வெள்ளம் ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.

குறிப்பாக, ஆற்றில் பாறைகள் அல்லது கற்கள் விழுந்து நீரோட்டம் தடைப்பட்டிருக்கலாம் என்றும், அந்தத் தடை உடைந்தபோது பெருமளவிலான நீர் திடீரென வெளியேறியிருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், வெள்ளப்பெருக்குக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்கான விரிவான ஆய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த காலங்களில் நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பெருமளவிலான உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில், மீண்டும் ஏற்பட்டுள்ள இந்தத் திடீர் வெள்ளம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய கப்பல்! மீறினால் தீயில் சிக்குவீர்கள்.. ஈரானின் கடும் எச்சரிக்கை
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri