ஜனாதிபதி தேர்தல் குறித்து வெளியாகியுள்ள தகவல்
உள்ளுராட்சி மன்றத்தேர்தல் ஏதேனும் காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டால், இந்த ஆண்டின் இறுதியில் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால், பதவிக்காலம் முடிவதற்கு ஓராண்டு முன்னர் தேர்தலுக்கு அழைப்பு விட அரசியல் அமைப்பில் சந்தர்ப்பம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் அமைப்பில் சந்தர்ப்பம்
உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஆளும் கட்சி தோல்வியடைந்தால் அது ஜனாதிபதி தேர்தலை பாதிக்கும் என்பதனால், அரசாங்கம் உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முயற்சிக்கும் என எதிர்க்கட்சிகள் ஊகம் வெளியிட்டுள்ளன.
எதிர்வரும் 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் 17ம் திகதியின் பின்னரே ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். எனினும், தற்போதைய ஜனாதிபதி ரணில் தேர்தலில் போட்டியிட்டால், ஓராண்டு முன்கூட்டியே தேர்தலை நடாத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் அரசியல் வட்டாரத் தகவல்களில் கருத்துக்கள் வெளியிடப்பட்ட போதிலும், அரசாங்கத் தரப்பில் அதிகாரபூர்வமாக எவ்வித அறிவிப்புக்களும் வெளியிடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.