உடனடியாக நடைமுறைக்கு வரும் போர்நிறுத்தம்..! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு

Donald Trump Vladimir Putin Volodymyr Zelenskyy Russo-Ukrainian War Russia
By Shadhu Shanker Oct 11, 2026 04:43 PM GMT
Report

ரஷ்யாவும் உக்ரைனும் எரிசக்தி தொடர்பான தாக்குதல்களை நிறுத்துவதற்கான போர்நிறுத்தத்திற்கு இணங்கியுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று(11) அறிவித்துள்ளார்.

எனினும், இந்த அறிவிப்பு தங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு நெருக்கமான வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் பதிவு

"உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், ரஷ்யா – உக்ரைன் போரில் எரிசக்தி போர்நிறுத்தம் நடைமுறைக்கு வருகிறது. இரு தரப்பினரும் இதற்கு இணங்கியுள்ளனர். இதனை மீற வேண்டாம்” என ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ட்ரம்பின் அறிவிப்பு தொடர்பாக சர்வதேச செய்தி நிறுவனம் ஒன்றிற்கு கருத்துத் தெரிவித்த மற்றொரு உக்ரைன் அதிகாரி, “நாங்களும் உங்களைப் போலவே இந்த அறிவிப்பைப் படித்துத் தெரிந்துகொண்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கனடா பிரதமர் மார்க் கார்னி, பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப் மற்றும் நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட்டே ஆகியோருடன் இது தொடர்பாகக் கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.

“உக்ரைன் போர்நிறுத்தத்தை ஆதரிக்கிறது. ரஷ்யாவும் இதற்கு ஆதரவளிப்பது முக்கியமானதாகும். அமெரிக்கத் தரப்பிலிருந்து மேலதிக விபரங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்” என ஜெலென்ஸ்கி தனது எக்ஸ் தளப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பதற்றத்தைக் குறைத்தல், உயிர்களைப் பாதுகாத்தல், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தீர்மானங்களை மேற்கொள்ளுதல் மற்றும் நீடித்த அமைதியை உறுதிப்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளுக்கு உக்ரைன் எப்போதும் முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 சர்ச்சைக்குரிய ஒப்பந்தம்

ட்ரம்பின் இந்த அறிவிப்பானது, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் அவர் கலந்துரையாடிய சில நாட்களுக்குப் பின்னர் வெளியாகியுள்ளது.

இதன்போது, உலகச் சந்தைகளுக்கு ரஷ்ய டீசல் எரிபொருளை விநியோகிப்பது தொடர்பாக இரு தலைவர்களும் சர்ச்சைக்குரிய ஒப்பந்தமொன்றை அறிவித்திருந்தனர்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் போர்நிறுத்தம்..! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு | Trump Ukraine Russia Energy Ceasefire

இந்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட வெள்ளிக்கிழமையன்று, அமெரிக்கா மற்றும் உக்ரைனின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளும் மியாமியில் ஆரம்பமாகின.

இப்பேச்சுவார்த்தைகளில் ட்ரம்பின் மருமகன் ஜாரெட் குஷ்னர் மற்றும் அமெரிக்காவின் சிறப்புத் தூதுவர் ஸ்டீவ் விட்கொஃப் ஆகியோரும் பங்கேற்றனர்.

எனினும், ரஷ்ய டீசல் எரிபொருள் தொடர்பான ஒப்பந்தத்தை விமர்சித்த ஜெலென்ஸ்கி, இத்தகைய நடவடிக்கை போரை மேலும் நீடிக்கச் செய்யும் எனத் தெரிவித்திருந்தார்.

முக்கிய தாக்குதல் இலக்கு

இதற்குப் பதிலளித்த ட்ரம்ப்,

“ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ளக்கூடிய புதிய தலைவரை உக்ரைன் தேர்ந்தெடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

ஞாயிற்றுக்கிழமை வெளியான அறிவிப்புக்கு வழிவகுத்த காரணம் என்ன என்பது உடனடியாகத் தெளிவாகவில்லை. எனினும், அதே நாளில் ABC செய்தி நிறுவனத்துக்கு வழங்கிய நேர்காணலில் ஜெலென்ஸ்கியும் எரிசக்தி தொடர்பான போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

உடனடியாக நடைமுறைக்கு வரும் போர்நிறுத்தம்..! ட்ரம்பின் அதிரடி அறிவிப்பு | Trump Ukraine Russia Energy Ceasefire

“அவர்கள் எரிசக்தி போர்நிறுத்தத்தை விரும்பினால், அதற்குத் திறந்த மனதுடன் இருக்கிறோம். எங்களைத் தாக்க வேண்டாம். எமது குழந்தைகளைக் கொல்ல வேண்டாம்.

அதற்குப் பதிலாக, உங்கள் டீசல் எரிபொருள் விநியோகத்தை இலக்குவைத்து நாம் தாக்குதல் நடத்துவதை நிறுத்துவோம். இது நியாயமான ஒப்பந்தம் என நான் கருதுகிறேன்” என்று ஜெலென்ஸ்கி தெரிவித்திருந்தார்.

2022ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது முழு அளவிலான படையெடுப்பை ஆரம்பித்த முதல் சில மாதங்களிலிருந்தே, எரிசக்தி உட்கட்டமைப்புகள் ரஷ்யாவின் முக்கிய தாக்குதல் இலக்குகளில் ஒன்றாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தாளையடி சந்தியில் முச்சக்கர வண்டி- கப் ரக வாகனம் மோதி விபத்து

தாளையடி சந்தியில் முச்சக்கர வண்டி- கப் ரக வாகனம் மோதி விபத்து

மகிந்தவை மட்டுமல்ல ட்ரம்ப்பையும் அலறவிட்ட தமிழ் பெண்!

மகிந்தவை மட்டுமல்ல ட்ரம்ப்பையும் அலறவிட்ட தமிழ் பெண்!

மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US