பாதாளக் குழுக்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்! ஆனந்த விஜேபால
போதைப்பொருள் மற்றும் பாதாளக் குழுக்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
அத்துடன் கடந்த இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதனுடனான குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 5 இலட்சத்து 74 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
குருநாகல் - நிக்கவரெட்டிய பகுதியில் நேற்று(11) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கடுமையான சட்ட நடவடிக்கை
அவர் மேலும் தெரிவிக்கையில், "வெளிநாடுகளில் பதுங்கியுள்ள பாதாளக் குழுவினர் பலர் வெகுவிரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவர்.

சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டுவதற்கும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் பகுதியாக, குற்றவாளிகளிடமிருந்து 3 ஆயிரத்து 980 சட்டவிரோதத் துப்பாக்கிகள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
தகுதியின் அடிப்படையில் எந்தவொரு நபருக்கும் விலக்களிக்காமல், முறைகேடுகள் மற்றும் பொது நிதித் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் நபர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நீதிபதிகளின் எண்ணிக்கை
மோசடியாளர்கள் எவரும் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாது. நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் சுமார் 11 இலட்சம் வழக்குகளைத் தீர்ப்பதைத் துரிதப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், தாமதமின்றி நீதி கிடைப்பதை உறுதி செய்ய நீதிமன்றங்களின் அமர்வு நேரங்களும் நீடிக்கப்பட்டுள்ளன எனக் குறிப்பிட்டார்.
சக்திவாய்ந்த ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த பலருக்கு அடுத்தடுத்து காத்திருக்கும் சிக்கல்! ஏற்பட்டுள்ள பரிதாபநிலை
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri