கந்தளாய் குளத்தை நாடும் சுற்றுலாப் பயணிகள் அதிகரிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து வருவதற்கு, இயற்கை அழகுமிக்க கடற்கரைகள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், வெந்நீர் ஊற்றுகள் மற்றும் வனவிலங்குகளைப் பார்வையிடும் வாய்ப்புகள் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.
குறிப்பாக, பளிங்குக் கடற்கரை, நிலாவெளி கடற்கரை, கன்னியா வெந்நீர் ஊற்று மற்றும் மான்களைப் பார்வையிடக்கூடிய பகுதிகளுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகள், தமது பயணத்தின் ஒரு பகுதியாக கந்தளாய் குளத்திற்கும் செல்கின்றனர்.
கந்தளாய் குளத்தின் இயற்கைச் சூழல், குடும்பத்தினருடன் அமர்ந்து உணவருந்தும் வசதி, படகுச் சவாரி மற்றும் உள்ளூர் உணவு வகைகளைச் சுவைக்கும் வாய்ப்பு ஆகியவை பயணிகளை ஈர்க்கும் அம்சங்களாக உள்ளன.
சுற்றுலாப் பயணிகள்
குறிப்பாக, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பங்களாகவும் நண்பர்கள் குழுக்களாகவும் வருகை தருவோர் அதிகமாகக் காணப்படுகின்றனர்.

இதன் மூலம் கந்தளாய் குளம் ஒரு பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலாத் தலமாகவும் முக்கியத்துவம் பெற்று வருகின்றது.
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri