சம்பள உயர்வு தொடர்பில் அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் !
2027 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அரச ஊழியர்களின் சம்பள உயர்வு மீண்டும் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி ஆசிரியரின் தொடக்கச் சம்பளம் ரூ. 65,000 ஆகவும், மருத்துவரின் தொடக்கச் சம்பளம் ரூ. 94,000 ஆகவும் உயரும் என்றும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
நிக்காவெரட்டியாவில் இன்று(11.10.2026) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சம்பள உயர்வு
ஜனாதிபதி மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் தனது முதல் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் பொதுத்துறை ஊழியர்களின் ஊதியங்களை ஏற்கனவே உயர்த்திவிட்டது.அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் மற்றொரு ஊதிய உயர்வை நடைமுறைப்படுத்தும்.

வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும், அரசு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்கும் பொதுச் சேவையை வலுப்படுத்துவது அவசியம் எனக் குறிப்பிட்டார்.
ஆசிரியர்கள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் கிராம அலுவலர்கள் உள்ளிட்ட 121,000 புதிய பொதுத்துறை ஊழியர்களைப் பணியமர்த்தும் திட்டங்களையும் ஜனாதிபதி அறிவித்தார்.
அரசியல் நியமனங்கள்
அரசியல் நியமனங்களுக்குப் பதிலாக நேர்காணல்கள் மூலம் ஆட்சேர்ப்பு நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

கிராம அலுவலர்களுக்கும், பிரிவேன நிறுவனங்களுக்கும், ஆசிரியர் பயிற்சி பெறுபவர்களுக்கும் வழங்கப்படும் படிகளை அதிகரிப்பதற்கான திட்டங்களை ஜனாதிபதி மேலும் அறிவித்தார்.
நாட்டின் வளர்ச்சிக்கு வலுவான மற்றும் திறமையான பொதுச் சேவை இன்றியமையாதது என அவர் வலியுறுத்தினார்.
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri