ஷிரந்தி ராஜபக்சவை பிணையில் விடுவிக்க திரை மறைவில் தீட்டிய திட்டம்...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்குப் பிணை வழங்குவதற்காக கொழும்புப் பிரதான நீதிமன்ற நீதவான் ஒருவர் திரை மறைவில் இருந்து மிகவும் திட்டமிட்டு சில செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளதாகத் தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஷிரந்தி ராஜபக்சவை நவலோக்க வைத்தியசாலையில் அனுமதித்து அவருக்குச் சாதகமான மருத்துவ அறிக்கையைப் பெற்று, பிணை பெற்றுக்கொள்வதற்கான ஒரு திட்டமே நடைமுறைப்படுத்தப்பட்டதாக புலனாய்வு தகவல்களை வெளியிடும் ஈதலய வலையொளித் தளம் குறிப்பிட்டுள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ள மேலதிக தகவல்கள்,
யார் அந்த நீதிமன்ற நீதவான்
கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் ஷிரந்தி ராஜபக்சவின் வழக்கை விசாரித்த தர்ஷிகா பிரேமரத்ன திட்டமிட்டுச் செயற்பட்டிருந்தார் என்ற சந்தேகத்திற்குரிய கருத்துக்கள் தான் தற்போது முன்னிலைப்படுத்தப்பட்டு வருகின்றன.
கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவான் தர்ஷிகா பிரேமரத்ன ஷிரந்தி ராஜபக்சவை நவலோக்க வைத்தியசாலைக்கு அனுப்புமாறு சிறைச்சாலை ஆணையாளருக்கு உத்தரவிட்டிருந்தார். அவர் விடுத்த உத்தரவில் பாரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நீதிமன்ற நீதவான் தர்ஷிகா பிரேமரத்னவுக்கு அத்தகைய உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம் இருக்கிறதா? ஒரு தனியார் வைத்திசாலைக்கு, அதாவது எதிர் தரப்பின் கோரிக்கையின் பேரில் மஜிஸ்திரேட்டுக்கு உத்தரவு பிறப்பிக்கும் சட்டப்பூர்வ அடித்தளம் இல்லை என்பதே சட்ட வல்லுநர்களின் தெளிவான பிரகடனம்.
அன்றைய தினம் கொழும்பு பிரதான மஜிஸ்திரேட் அசங்க போதரகம முன்பே ஷரந்தி முன்னிலைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அன்றைய தினம் அசங்க போதரகம நீதிபதி அங்கு இருக்கவில்லை.
விடுமுறைக்குச் சென்றுள்ளதாகத்தான் அறியக்கிடைத்தது. அதனால்தான் தர்ஷிகா பிரேமரத்ன இந்த வழக்கினை விசாரித்திருந்தார். மேலும் ஒரு சந்தேகம் விடுமுறை தொடர்பிலும் தோன்றியுள்ளது.
அசங்க போதரகம இந்தச் சம்பவத்திற்கு முன்னரே விடுமுறையை விடுத்திருந்தாரா? அல்லது இந்தச் சம்பவம் கேள்விப்பட்டவுடன் விடுமுறையில் சென்றாரா என்பது துல்லியமாகத் தெரியாது.
ஏற்பட்டுள்ள சட்டச் சிக்கல்
மகிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே இவ்வாறு குறிப்பிடுகிறார்.
நீதிமன்ற உத்தரவுகளின்படி, சிறைச்சாலை ஆணையாளர் ஷிரந்தி ராஜபக்சவை நவலோக்க வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காகச் அனுப்பாதது நீதிமன்ற அவமதிப்பாகும் நீதிமன்ற உத்தரவுகளை மீறுவதாகும்.
எனவே சிறைச்சாலை ஆணையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான் அவர் தெரிவித்த கருத்து, குறித்த முறைமுக சதியில் சட்டத்தரணி மனோஜ் கமகேவும் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஷிரந்தியையோ அல்லது வேறு யாரையுமோ எந்தவொரு சந்தேக நபரையும் தனியார் வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு எந்தவொரு சட்டப்பூர்வ விதிகளும் இல்லை. நீதிமன்ற சேவைகள் ஆணைக்குழு சுற்றறிக்கையின் 344 ஆவணத்தில் அது தொடர்பான முழுமையான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர்கள் அல்லது கைதிகளுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கப்படும் கோரிக்கைகள் விடுக்கப்படும் சந்தர்ப்பங்களில், அந்தக் கோரிக்கை சிறைச்சாலை மருத்துவரிடமே சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
தர்ஷிகா பிரேமரத்ன இதற்கு முன்பு அங்குணுகொலபெலஸ்ஸ மஜிஸ்திரேட்டாக இருந்தார். நீர்கொழும்பு மஜிஸ்திரேட்டாகவும் சில காலம் இருந்துள்ளார். அங்கேயும் சில சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த செயறபாடுகளில் ஏதோவொரு சந்தேகத்திற்குரிய சம்பவம் நடந்துள்ளது. சட்டத்தின் ஏற்பாடுகள் இல்லாத சந்தர்ப்பத்தில் தனியார் வைத்தியசாலைக்கு அனுமதிப்பதற்காகச் சிறைச்சாலை ஆணையாளருக்கு உத்தரவிட்டார் என்பதுதான் இப்போது கேள்வியாக உள்ளது.
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri