தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்
கடந்த வாரத்துடன் ஒப்பிடும்போது நாட்டில் தங்கத்தின் விலை ரூ. 5,000 அதிகரித்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்று (11) காலை கொழும்பு ஹெட்டியார் தெரு தங்க சந்தையில்,
ஒரு பவுண் "22 கரட்" தங்கத்தின் விலை நேற்று (10) ரூ. 305,300 என விலை நிர்ணயிக்கப்பட்ட நிலையில், இன்று ரூ. 310,000 ஆக அதிகரித்துள்ளது.
"24 கரட்" தங்கத்தின் விலை
இதற்கிடையில், நேற்று (10) ரூ. 330,000 ஆக இருந்த "24 கரட்" தங்கத்தின் விலை இன்று ரூ. 335,000 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, 22 கரட் மற்றும் 24 கரட் தங்கத்தின் விலை திடீரென உயர்ந்ததற்கு உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மையே காரணம் என்றும் நிபுணர்கள் விளக்கியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




