இலங்கையில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட எலுமிச்சை விலை
இலங்கையில் ஒரு கிலோ கிராம் எலுமிச்சை பழம் 3000 - 3500 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாக சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டின் பல பகுதிகளில் ஒரு கிலோ எலுமிச்சை விலை 3000 ரூபாவைத் தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்கள் வாழ்நாளில் ஒருபோதும் எலுமிச்சைப்பழத்தின் சில்லறை விலை இந்த அளவுக்கு உயர்ந்ததில்லை என்றும், இந்த விலை உயர்வு தங்களை ஆச்சரியப்படுத்துவதாகவும் நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
விலை உயர்விற்கான காரணம்
அதன்படி, ஒரு எலுமிச்சை பழத்தினை வாங்க நுகர்வோர் ரூ.50-60 செலவிட வேண்டியுள்ளது என்றும், விலை உயர்வு காரணமாக சிலர் இதனை உட்கொள்வதினை தவிர்ப்பதாகவும் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் தற்போது தேவையான அளவில் விளைச்சல் இன்மையே இந்த விலை உயர்விற்கு காரணம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

சீனா மீது திரும்பிய ட்ரம்பின் கோபம்... ஜி ஜின்பிங் உடனான சந்திப்பு ரத்தாகும் என மிரட்டல் News Lankasri

சற்றுமுன் பிக் பாஸ் வீட்டில் இருந்து எலிமினேட் ஆன போட்டியாளர்! முதல் வாரத்திலேயே அதிர்ச்சி Cineulagam
