பலரை கதிகலங்க வைத்துள்ள அதிரடி நகர்வு! சுரேஷ் சாலேவை தொடர்ந்து அடுத்தடுத்து பதறும் அரசியல்வாதிகள்
முன்னாள் அரச புலனாய்வு அதிகாரி சுரேஷ் சாலே குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டமையானது, நாட்டின் அரசியல் பரப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியுடன் தொடர்பில் இருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நிலையில், குறித்த கைதினை தொடர்ந்து, அவர் மீதான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அவரை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளவுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இதற்கிடையில், சுரேஷ் சாலேவின் கைதுக்கு பின்னர், பல்வேறு அரசியல்வாதிகள் குறித்த கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக, ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர, பிவித்துறு உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில உள்ளிட்டோர் கடும் விமர்சனங்களையும் குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்திருந்தனர்.
இவர்களின் கருத்துக்களில் பொதுவாகவே, சுரேஷ் சாலே தமிழீழ விடுதலை புலிகளின் புலனாய்வு துறையை பிடிக்க முக்கிய பங்காற்றினார் என்பதை சுட்டிக்காட்டுவதே பிரதானமாக இருந்தது.
நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கைது நடவடிக்கையை உள்ளிட்ட, பல முக்கிய விடயங்கள் குறித்து விரிவாக ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
ராஷ்மிகா மந்தனா - விஜய் தேவரகொண்டாவின் பிரம்மாண்ட திருமண ஏற்பாடுகள்.. ஒரே நாளில் 2 திருமணம்.. Cineulagam
இறக்குமதி செய்யப்பட்ட ரசாயனம் சேப்பாக்கம் மைதானத்தில் தெளிப்பு! வாழ்வா சாவா போராட்டத்தில் இந்தியா News Lankasri