எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான தகவல்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
அடுத்த மாத இறுதி வரை நாட்டு மக்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்புகள் இருப்பதாக இலங்கை பெற்றோலியக்கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 5 எரிபொருள் கப்பல்களுக்கான கட்டளைகள் நேற்று உறுதி செய்யப்பட்டதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் மயூர நெத்திகுமாரகே குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் QR குறியீடு பதிவில் தொடரும் சிக்கல்! போலி இணையத்தளங்கள் குறித்து பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை
எரிபொருள் கொள்வனவு
ஏப்ரல் மாதத்திற்குத் தேவையான அனைத்து எரிபொருள் கொள்வனவு கட்டளைகளும் நேற்று (18) உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

"இதற்கு முன்னர் ஏப்ரல் மாத இறுதி வரை எரிபொருள் கையிருப்பு உள்ளதாகக் குறிப்பிட்டிருந்தோம். அது மார்ச் மாத இறுதி வரை நாம் உறுதிப்படுத்திய கப்பல்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டே கூறப்பட்டது.தற்போது ஏப்ரல் மாதம் முழுவதற்குமான கப்பல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, அடுத்த மாத இறுதி வரை எமக்குத் தேவையான எரிபொருள் கையிருப்புகள் கிடைத்துக்கொண்டிருக்கும். எரிபொருள் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை.
அத்துடன் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதில் தற்போது எவ்வித தொழில்நுட்பக் கோளாறுகளும் இல்லை. ஒரு தொலைபேசி இலக்கம் மற்றும் ஒரு அடையாள அட்டை இலக்கத்தின் கீழ் ஒரு வாகனத்தை மாத்திரமே பதிவு செய்ய முடியும் என்பதை நினைவில் கொள்ளவும்" என்றும் தெரிவித்துள்ளார்.
முக்கிய தலைவர்களை இழந்தும் அசராமல் போரிடும் ஈரான் - பின்னணியில் மொசைக் பாதுகாப்பு கோட்பாடு News Lankasri
லண்டனில் பிறந்து 18 நாட்களே ஆன குழந்தைக்கு நேர்ந்த பரிதாபம்: 3வது மாடியில் இருந்து கீழே வீசிய தாய் News Lankasri