உதிரிப்பாகங்கள் இன்மையால் இ.போ.சபையின் ஆயிரம் பேருந்துகள் நிறுத்தம்
உதிரிப்பாகங்கள் இன்மையால் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான ஆயிரம் பேருந்து வண்டிகள் பாவனையிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளது.
பெரும்பாலும் டயர் மற்றும் டியூப் ஆகியவற்றின் பற்றாக்குறை காரணமாகவே மேற்குறித்த அளவிலான பேருந்து வண்டிகளை போக்குவரத்தில் ஈடுபடுத்தாமல் ஒதுக்கி வைத்துள்ளதாக போக்குவரத்துச் சபையின் பொது ஊழியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு தேவையான டயர்களை வழங்கும் அம்பாறை டயர் மீள்நிரப்பு நிறுவனத்திற்குத் தேவையான மூலப் பொருட்கள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக அந்த நிறுவனத்தையும் மூட வேண்டிய நிலையை எதிர்கொண்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

இவ்வாறு டயர் மற்றும் டியூப் பற்றாக்குறை காரணமாக நீண்ட நாட்கள் பஸ்வண்டிகளை போக்குவரத்தில் ஈடுபடுத்தாமல் நிறுத்தி வைத்திருப்பதானது, கடைசியில் அவற்றை பழைய இரும்புக்கு விற்கும் நிலையையே உருவாக்கும் என்றும் போக்குவரத்துச் சபை ஊழியர் சங்கத்தின் தலைவர் சாகர தனஞ்சய தெரிவித்துள்ளார்.

வீட்டைவிட்டு வெளியே போக சொன்ன பார்வதி, கண்ணீர்விட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam