உள்ளூர் மாஃபியாக்களினால் கடும் நெருக்கடியில் மக்கள்! ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
உள்ளூர் மாஃபியாக்கள் காரணமாக பொதுமக்கள் பாரிய சுமைக்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மேலும், உள்நாட்டில் முட்டை விலையை குறைக்க உடனடியாக முட்டையை இறக்குமதி செய்ய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
முட்டைகளுக்கு தட்டுப்பாடு
இலங்கையில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.அத்துடன் அண்மைமைக்காலமாக சில வியாபாரிகள் முட்டை ஒன்றை 70க்கு விற்பனை செய்வதால் முட்டையின் விலையானது சடுதியாக உயர்வடைந்துள்ளது.

நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்டத்தை வலுப்படுத்த அதிகாரிகள் விரும்பாத காரணத்தினால் உணவுப் பொருட்களின் விலைகளை கட்டுப்படுத்துவதற்கான எந்த பொறிமுறையும் இல்லை.
அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி தொடரும்
எந்தச் சட்டம் கொண்டு வந்தாலும், கோழிகளுக்கு தங்கம் கொடுக்கப்படுவதில்லை.எனவே முட்டை விலையை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

முட்டையின் விலை அதிகரிப்பு காரணமாக முதியோர்கள், குழந்தைகள் மற்றும் ஏழைகள் அத்தியாவசிய புரதங்களைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய போக்கு தொடர்ந்தால் அரசுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சி
செய்வார்கள் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள்
சங்கத்தின் தலைவர் எச்சரித்துள்ளார்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 19 மணி நேரம் முன்
Tamizha Tamizha: காதலித்த கணவருக்கு கண்முன் நடந்த இரண்டாவது திருமணம்! 14 ஆண்டுகளாக குறையாத காதல் Manithan
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam