முட்டை மற்றும் கோழி இறைச்சி விற்பனையில் வீழ்ச்சி!
முட்டை ஒன்றின் விலை 60 ரூபாவிற்கு மேல் செல்ல அனுமதிக்கப்படமாட்டாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அழைப்பாணையின் பிரகாரம் இன்று நுகர்வோர் அதிகார சபைக்கு வருகை தந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முட்டை மற்றும் கோழி உற்பத்தியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
முட்டை விலை
சந்தையில் வெள்ளை முட்டை ஒன்றின் விற்பனை விலை 63 ரூபாவுக்கும், சிவப்பு முட்டை 68 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படுகின்றது.

கோழித்தீவனம் மற்றும் புன்னாக்கு ஆகியவற்றின் விலை 15 ரூபாவில் இருந்து 115 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பால் கறக்கும் பசுக்களுக்கு வழங்கப்படும் சிறப்பு வகை கால்நடை தீவனம் 35 ரூபா அதிகரிக்கப்பட்டு 85 ரூபாவான விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முட்டை மற்றும் கோழி விற்பனை வீழ்ச்சி
இதேவேளை, முட்டை மற்றும் கோழி ஆகியவற்றின் விற்பனை பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தேசிய விலங்கு பண்ணையாளர்கள் ஒன்றிய அழைப்பாளர் சுஜீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்.

கால்நடை தீவனங்களின் விலை அதிகரிப்பு காரணமாக முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கால்நடைகளுக்கு வழங்கப்படும் மருந்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால் தொழில்களை மேற்கொள்வதில் சிரமம் எதிர்நோக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அண்ணாமலை.. குடும்பத்தை விட்டு வெளியேறும் மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ Cineulagam
உங்க குழந்தை என் வயிற்றில் வளர்கிறது.. சரவணனிடம் கூறிய தங்கமயில்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
ஐக்கிய அரபு அமீரகம் மீது பாய்ந்த ஈரானின் 137 ஏவுகணைகள், 209 ட்ரோன்கள்: மத்திய கிழக்கில் பதற்றம் News Lankasri