பெண்களின் கழிப்பறைக்குள் மர்மான முறையில் கையடக்க தொலைபேசி - அதிர்ச்சியில் உறைந்த பெண்கள்
இரத்தினபுரியில் இயங்கும் நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களை தகாத முறையில் புகைப்படங்களைப் பெற முயன்ற நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெண்களின் கழிப்பறைக்குள் சூட்சுமான முறையில் கையடக்க தொலைபேசி ஒன்றை மறைத்து வைத்து வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இரத்தினபுரி நீதவான் நீதிமன்றிலை முன்னிலைப்படுத்தப்பட்ட போது குற்றத்தை ஒப்புக் கொண்டமையினால் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கையடக்கத் தொலைபேசி
இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டவர் நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் ஊழியராகும்.

குறித்த நிதி நிறுவனமொன்றில் பணிபுரியும் பெண்களின் மலசலகூடத்திற்குள் சுவரில் கையடக்கத் தொலைபேசி ஒன்றை பொருத்தி, பெண்களை தவறான முறையில் புகைப்படங்களைப் பெற முயற்சித்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர், துளைகளுடன் கூடிய காகிதம் ஒன்று கழிவறைக்குள் ஒட்டப்பட்டிருந்தமையால் சந்தேகம் அடைந்து பரிசோதித்துள்ளார்.
பெண்களின் தகாத புகைப்படங்கள்
இதன்போது காகிதத்திற்கு உள்ளே கையடக்கத் தொலைபேசி ஒன்று இருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசியை தனிப்பட்ட மடிக்கணினி ஒன்றில் பொருத்தி பரிசோதித்தபோது, பெண்களின் தகாத புகைப்படங்களை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இது தொடர்பாக இரத்தினபுரி பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேக நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
YOU MAY LIKE THIS VIDEO
விஸ்வநாத் & சன்ஸ் படத்தை பார்த்துவிட்டு முதல் விமர்சனம் சொன்ன தெலுங்கு தயாரிப்பாளர்.. படம் எப்படி இருக்கு? Cineulagam