QR முறைமையை கண்காணிக்க எரிபொருள் நிலையங்களில் களமிறக்கப்படும் பொலிஸார்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
புதிய இணைப்பு
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம், பொலிஸாரின் தலையீட்டின் கீழ், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுமே QR முறை மூலம் எரிபொருள் விநியோகிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா இன்று (15) பிற்பகல் சிறப்பு செய்தியாளர் சந்திப்பை நடத்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எனவே, அடுத்த மாத இறுதி வரை எரிபொருள் வழங்குவதில் எந்த பிரச்சினையும் இல்லை." இன்று முதல் QR குறியீடு முறை செயல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே ஒரு வாரத்திற்குத் தேவையான எண்ணெய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், அந்த அளவு எண்ணெயை எந்த நேரத்திலும் நிரப்பலாம்.நாட்டில் உள்ள அனைத்து நிரப்பு நிலையங்களும் QR குறியீடு முறையைப் பயன்படுத்தி எரிபொருளை ஸ்கேன் செய்து பெற் முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, நாட்டில் யாரும் எரிபொருள் பெற வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை. இதனை கண்கானிக்க பொலிஸ் பிரிவும் களமிறக்கப்பட்டுள்ளது.
"அதேபோல், QR குறியீட்டிற்கும் நாங்கள் வழங்கிய இருப்புக்கும் இடையில் ஏதேனும் முரண்பாடு இருந்தால், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ளவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். முன்பு போலல்லாமல், உரிமம் இரத்து செய்யப்படலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதலாம் இணைப்பு
நாட்டில் போதுமான எரிபொருள் இருப்புக்களை பராமரிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் விநியோகத்தில் எந்த இடையூறும் இல்லை என்று நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் மற்றும் டீசல் இருப்புக்கள்
இதேவேளை, 35,000 மெட்ரிக் டொன் எரிபொருளை ஏற்றிக்கொண்டு வரும் கப்பல் நாளை நாட்டை வந்தடைய உள்ளது என பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பலில் பெட்ரோல் மற்றும் டீசல் எரிபொருள்கள் இரண்டும் இருப்பதாகவும், இந்த மாதம் மேலும் 3 எரிபொருள் கப்பல்கள் நாட்டிற்கு வர உள்ளன.
அதன்படி, ஏப்ரல் இறுதி வரை தேவையான எரிபொருள் இருப்புக்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
விலை மாற்றம்
எரிபொருள் இருப்புக்கள் இறக்கப்படும் நேரத்தில் உள்ள விலைகளின் அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்
மேலும், எரிபொருள் கப்பல்கள் இந்தியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து நாட்டை வந்தடைய உள்ளதாகவும் மேலும் கூறியுள்ளார்.