எமது கட்சி மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறும்: தேசிய மாநாட்டில் மைத்திரி சூளுரை

Srilanka Freedom Party Maithripala Sirisena
By Rakesh Sep 04, 2023 06:15 PM GMT
Report

"ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறும் கட்சியை எவரும் பிளவுபடுத்த முடியாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 72 ஆவது தேசிய மாநாடு கட்சித் தலைவர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று மாலை கொழும்பில் நடைபெற்றது. இதன்போது உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கட்சியின் 72 ஆவது மாநாட்டால் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பிளவுபடும் எனவும், கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர குறித்த மாநாட்டில் பங்கேற்கமாட்டார் எனவும் பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியின் சர்ச்சைக்குரிய உறுப்பினர்கள் அனைவரும் ஒரே மேடையில் காட்சியளித்தனர்.

எமது கட்சி மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறும்: தேசிய மாநாட்டில் மைத்திரி சூளுரை | Srilanka Freedom Party Meeting

அத்துடன், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை யாராலும் அழிக்க முடியாது எனவும் அவர்கள் சூளுரைத்தனர். இந்த மாநாட்டைக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகரவின் தொகுதியான குருநாகலையில் நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது


எனினும், ஆளுங்கட்சி பக்கம் அமைச்சுப் பதவிகளை பெற்றுள்ள சுதந்திரக் கட்சி உறுப்பினர்களின் கோரிக்கையின் பிரகாரம் கொழும்பில் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.

இதனால் தயாசிறி ஜயசேகரவும், அவர்களின் சகாக்களும் மாநாட்டில் பங்கேற்கமாட்டார்கள் எனவும் கூறப்பட்டது.

எமது கட்சி மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறும்: தேசிய மாநாட்டில் மைத்திரி சூளுரை | Srilanka Freedom Party Meeting

தயாசிறி ஜயசேகரவின் பொதுச்செயலாளர் பதவிகூட பறிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அமைச்சர்களாக உள்ள சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களான நிமல் சிறிபாலடி சில்வா, மஹிந்த அமரவீர மற்றும் இராஜாங்க அமைச்சுப் பதவிகளைப் பெற்றுள்ள லசந்த அழகியவண்ண உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.

மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் சந்திரிகா அம்மையார் பங்கேற்கவில்லை.

அவரின் வாழ்த்துச் செய்தி வாசிக்கப்பட்டது. பிரதமர் தினேஷ் குணவர்த்தன, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச உட்பட ஏனைய கட்சிகளின் பிரதிநிதிகளும் மாநாட்டில் பங்கேற்றிருந்தனர். 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், பிரித்தானியா, United Kingdom

18 Jul, 2019
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, New Malden, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

மந்துவில், கனடா, Canada, Stockholm, Sweden

16 Jul, 2026
மரண அறிவித்தல்

கோவில்குளம், மன்னார், Ebeltoft, Denmark, Århus, Denmark

14 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US