ஜனாதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்த இளைஞர் கைது
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் எப்பாவல, மெதியாவ பகுதியைச் சேர்ந்த 19 வயதான இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
முகநூல் கணக்கு ஒன்றின் மூலம இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் குற்ற விசாரணை பிரிவினர் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.

ஜனாதிபதியின் விஜயம்
எதிர்வரும் 7ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தம்புத்தேகம மற்றும் எப்பாவல ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இவ்வாறானதொரு சூழலில் “இந்த நாட்டை சீரழித்த நபர் எமது பகுதிக்கு வருகின்றார். ஸ்னைப்பர் துப்பாக்கி ஒன்றை பெற்றுக் கொள்ள முடியுமா?” என முகநூலில் குறித்த இளைஞர் பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவினை தொடர்ந்து குற்ற விசாரணை பிரிவினர் விரைந்து செயல்பட்டு குறித்த இளைஞரை கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri