வருட இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75 சதவீதமாக குறைக்கப்படும்: அமைச்சர் உறுதி
இந்த வருடத்தை சாதகமான பொருளாதார வேகத்துடன் ஆரம்பிப்பதன் மூலம் வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75 சதவீதமாக குறைக்கப்படும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2024 ஆம் ஆண்டில் நேர்மறையான பொருளாதார வளர்ச்சி விகிதத்துடன் தொடங்குகிறோம். இந்த ஆண்டின் முதல் காலாண்டின் முடிவில்,மக்களின் சுமை 75% என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
வரிக்கொள்கை
நடைமுறையில் உள்ள வரிக் கொள்கை எதிர்காலத்தில் அதிக நிவாரணம் பெறுவதற்கு வழிவகுக்கும் என்பதினை உறுதிப்படுத்த முடியும்.
நாட்டின் எதிர்காலத்திற்கான முதலீடு அரசாங்கத்திற்கு ஆதரவாகும். சிலர் வரி என்று கூறி நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள். இருப்பினும், இலங்கையின் வரி 12%ஆகும். ஆனால் வேறு நாடுகளின் வரி சுமார் 38% முதல் 43% வரை ஆகும்.
எவ்வாறாயினும், வரி திருத்தங்களில் எந்தவொரு ஆய்வையும் நடத்தாமல் சில நிறுவனங்கள் பொதுமக்களுக்கு அழுத்தம் கொடுத்துள்ளன.
நுகர்வோர் விவகார ஆணையத்தின் புதிய திட்டம்
2024 ஆம் ஆண்டில், நுகர்வோர் விவகார ஆணையத்திற்கு ஒரு புதிய திட்டம் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்.
வருடத்தின் முதல் காலாண்டு இறுதிக்குள் மக்கள் மீதான சுமை 75 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri
