டொலர் நெருக்கடி! இலங்கையில் ஏற்பட்டுள்ள மற்றொரு சிக்கல்
அமெரிக்க டொலர் பற்றாக்குறையினால் மரபணு சோதனைகளுக்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மரபணு சோதனை அறிக்கைகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் நீதிச்சேவை ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.
இந்த பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு போதியளவு இரசாயனங்களை பெற்றுக்கொள்ள முடியாத நிலை உருவாகியுள்ளது என தெரிவித்துள்ளது.
மரபணு பரிசோதனைகளை நடாத்துவதற்காக மாதாந்தம் சுமார் 200 அறிக்கைகள் வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படும் இரசாயன வகைகள் வெளிநாடுகளிலிருந்து தருவிக்கப்படுபவை எனவும் இவற்றை பெற்றுக்கொள்ள அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இரசாயன வகைகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள கால தாமத நிலையினால் வழக்கு விசாரணை அறிக்கைகளை வெளியிட முடியாதுள்ளது என அரசாங்க இரசாயன பகுப்பாய்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை பாடகர் சபேசனுக்கு வாழ்க்கையில் மறக்க முடியாத விஷயத்தை செய்த எஸ்.பி.சரண்... எமோஷ்னலான மேடை Cineulagam
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri