உக்ரைனில் இருந்து நாடு திரும்ப விரும்பாத இலங்கையர்கள்! காரணம் என்ன?
உக்ரைனில் உள்ள 20 இலங்கையர்கள் நாட்டின் எல்லையை கடந்து போலந்து மற்றும் ஹங்கேரிக்கு சென்றடைந்துள்ளனர்.
உக்ரைனில் வசிக்கும் மேலும் 14 இலங்கையர்கள் போலந்து, ஸ்லோவாக்கியா மற்றும் ருமேனியா ஆகிய நாடுகளுக்கு எல்லையைக் கடந்து சென்றுள்ளதாக, உக்ரைன், துருக்கி மற்றும் ஜோர்ஜியாவுக்கான இலங்கைத் தூதுவர் எம்.ஆர்.ஹசன் தெரிவித்துள்ளார்.
எனினும் உக்ரைனின் எல்லையை கடந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு எதிர்பார்க்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையர்கள் சிலர் உக்ரைனியர்களை திருமணம் செய்து அந்நாட்டில் நிரந்தர வதிவிடம் பெற்றுள்ளமையே இதற்கு காரணமாகும் என அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையில் தங்கியுள்ள ரஷ்ய மற்றும் உக்ரைனிய சுற்றுலா பயணிகளுக்கு மேலதிக நிவாரணங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தங்கியுள்ள ரஷ்ய மற்றும் உக்ரைனிய சுற்றுலா பயணிகளின் வீசா காலத்தை இலவசமாக இரண்டு மாதங்களுக்கு நீடிக்க அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜீ தமிழில் சரிகமப-டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சிகளின் மகா சங்கமம்... மேடையில் நடந்த எமோஷ்னல் சம்பவம் Cineulagam

இந்த மாதங்களில் பிறந்த ஆண்கள் திருமணத்தின் பின் கோடிஸ்வரயோகம் பெறுவார்களாம்! நீங்க எந்த மாதம்? Manithan

மகாநதியை தொடர்ந்து விஜய் டிவியில் மாற்றப்படும் 2 சீரியல்களின் நேரம்.. எந்தெந்த தொடர் தெரியுமா? Cineulagam
