சபரிமலைக்கு செல்லும் வழியில் விபத்தொன்றில் சிக்கிய இலங்கை பக்தர்கள்
சபரிமலைக்கு செல்லும் வழியில் ஏற்பட்ட விபத்தொன்றில் பொகவந்தலாவை பகுதியை சேர்ந்த 14 ஐயப்ப பக்தர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கான உதவிகளை செய்து கொடுக்குமாறு நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் சென்னையில் உள்ள இலங்கை இணை தூதுவரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதற்காக சென்னையில் இருந்து வான் ஒன்றில் குறித்த 14 பக்தர்களும் சென்றுள்ளனர்.
மோதிய தனியார் பேருந்து
இதனையடுத்து, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் வைத்து வானில் ஏற்பட்ட கோளாறு காரணமாக குறித்த வான் வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வானின் பின்னால் அவ்வழியே வந்த தனியார் பேருந்து ஒன்று மோதியுள்ளதாலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri