புத்தளத்தில் தொடருந்தில் மோதி பரிதாபமாக பலியான நபர்
புத்தளம் - தில்லையடி தொடருந்து நிலையத்துக்கு அருகில் தொடருந்தில் மோதி நபர் ஒருவர் இறந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கி நேற்று (12.01.2024) இரவு பயணம் செய்த பயணிகள் தொடருந்தில் மோதியே மேற்படி நபர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நபர் தொடர்பில் இதுவரை தகவல் எதுவும் தெரியவில்லை என புத்தளம் பகுதிக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிசாம் குறிப்பிட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகள்
மேலும், சடலம் புத்தளம் தள வைத்தியசாலையின் பிரேத அறையின் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது என திடீர் மரண விசாரணை அதிகாரி கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தேசியக்கொடி தமிழ் இன ஒடுக்குமுறையின் முதல் குறியீடு: ஜோதிலிங்கம் ஆதங்கம் 23 மணி நேரம் முன்
சுட்டு வீழ்த்தப்பட்ட போர் விமானங்கள்: அமெரிக்க விமானியை தேடும் ஈரான்: விலையுயர்ந்த பரிசு அறிவிப்பு News Lankasri
இந்தியாவிற்கு வந்துகொண்டிருந்த ஈரான் கச்சா எண்ணெய் - திடீரென சீனாவிற்கு திரும்பிய கப்பல் News Lankasri
மீனாவை கொலை செய்ய ஆள் அனுப்பிய சிந்தாமணி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வாரம் நடக்கவிருப்பது இதுதான் Cineulagam