நேபாளத்தில் பேருந்து விபத்து: 12 பேர் பலி
மத்திய மேற்கு நேபாளத்தின் டாங் மாவட்டத்தில் இடம்பெற்ற பேருந்து, விபத்தில் இரண்டு இந்தியர்கள் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாளத்தின் பாங்கேயின் நேபால்கஞ்சில் இருந்து காத்மாண்டு செல்லும் பயணிகள் பேருந்தானது பாலத்தில் இருந்து விலகி ஆற்றில் விழுந்துள்ளது.
இந்நிலையில், விபத்தில் உயிரிழந்த 8 பயணிகளின் அடையாளம் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
22 பயணிகள் காயம்
மேலும், பேருந்து விபத்தில் 22 பயணிகள் காயமடைந்துள்ளதாக நேபாள பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக நேபாளத்தின் லமாஹி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விபத்து தொடர்பில், பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
NEW நிலைகொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம்: பல மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை - மக்களுக்கு அவசர அறிவுறுத்தல்
பணம் வலுவிழக்கும்! வரலாற்றை புரட்டிப்போடும் தங்கத்தின் விலை: அதிர்ச்சியூட்டும் பாபா வங்காவின் கணிப்பு