மட்டக்களப்பில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பல்கலைக்கழக மாணவன்: தேடுதல் பணி தீவிரம்
மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பகுதியில், பல்கலைக்கழக மாணவன் ஒருவர் தோணி கவிழ்ந்து நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
கோட்டைக்கல்லாறை சேர்ந்த 25வயதுடைய சுசிதரன் தனூஷன் என்ற இளைஞனே இவ்வாறு நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளார்.
உறவினர்கள் தகவல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தோணியில் வலைவீசி மீன்பிடித்துக்கொண்டிருந்த நிலையில், வலை வெள்ள நீரில் இழுத்துச் செல்லப்பட்தாகவும் இதன்போது தோணி கவிழ்ந்துள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
குறித்த இளைஞன் கிழக்கு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான பீடத்தின் இறுதியாண்டு மாணவன் எனவும் பல்கலைக்கழக விடுமுறையில் வீடுவந்திருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இளைஞன் காணாமல்போயுள்ளமை குறித்து களுவாஞ்சிகுடி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த இளைஞனை தேடும் பணிகளில் பொலிஸார் ஈடுபட்டுவருகின்றனர்.
மேலும், இளைஞன் இதுவரையில் மீட்கப்படாத நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |