ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட ஏழு இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்
உக்ரைனில் ரஷ்ய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட ஏழு இலங்கையர்களில் நான்கு பேர் குபியன்ஸ்க் நகரில் மருத்துவ மாணவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மூன்று பேர் தொழிலாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பிடிபட்ட இலங்கையர்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகள் என்று பரவி வரும் வதந்திகளுக்கும், அந்த ஏழு இலங்கையர்கள் மருத்துவ மாணவர்கள் என உக்ரைன் ஜனாதிபதி செலென்ஸ்கி கூறியதற்கும் முரணாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.
கார்கிவ் பொலிஸில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டை மேற்கோள்காட்டி அசோசியேட்டட் பிரஸ் (AP) வெளியிட்டுள்ள செய்தியில், ரஷ்யப் படைகளால் கைப்பற்றப்பட்ட பிரதேசத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் இலங்கையர்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும், அவர்கள் மொழியைப் புரிந்துகொள்ள முடியாத காரணத்தினால் தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ரஷ்யப் படைகளின் அட்டூழியம்
நிலோஜன் வசந்தகுமார்(20) உதயகமர் மேரி எடிட் பிரேமா(50) சாருஜன் ஞானேஸ்வரன்(25), தினீஸ் ஜோகேந்திரன்(34,) டிலுக்ஷன் றொபர்ட்கிளைவ்(25), திலுஜன் பத்தினஜகன்(20), ஐங்கரநாதன், கணேசன் மூர்த்தி (38) ஆகியோர் கைதிகளாக இருந்துள்ளனர்.
விடுவிக்கப்பட்ட இலங்கையர்களின் கூற்றுப்படி, குழுவில் ஆறு பேர் மேல் மாடியில் ஒரு பெரிய அறையில் தங்க வைக்கப்பட்டனர், அதே நேரத்தில் ஏழாவது, ஒரே பெண் ஒரு இருண்ட அறையில் தனியாக வைக்கப்பட்டார்.
இந்த நிலையில், 2022,செப்டெம்பர் 17ஆம் திகதி, உக்ரைனிய ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி, உக்ரைனில் உள்ள கார்கிவ் பிராந்தியத்தில் ரஷ்ய இராணுவத்தினரால் பொதுமக்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட 'சித்திரவதை அறைகளில் இருந்து ஏழு இலங்கை மாணவர்கள் மீட்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
சித்திரவதை அறை
"ஒவ்வொரு நாளும் நாங்கள் கழிப்பறைகள் மற்றும் குளியலறைகளை சுத்தம் செய்தோம்," என்று சிறைபிடிக்கப்பட்டவர்களில் ஒருவரான டிலுக்ஷன் ராபர்ட்கிளைவ் ஆங்கிலத்தில் கூறியுள்ளார்.
சில நாட்களில் ரஷ்யர்கள் வந்து எங்களை தாக்கினர்.
எவ்வாறாயினும், தமக்குத் தேவையான உணவு மற்றும் உடைகள் வழங்கப்பட்டாதாகவும்,
அவர்கள் உரிய வகையில் கவனிக்கப்பட்டு வந்ததாகவும் இலங்கையர்கள் தற்போது
கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாக்., சீனாவுக்கு கவலையளிக்கும் செய்தி - Tejas MK1 போர் விமானங்களை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
