இணையத்தில் வைரலாகும் இலங்கை பெண்ணின் புகைப்படம்
குவைத்தில் இருந்து நாடு திரும்பிய இலங்கை பெண்ணின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
குருநாகல், மல்சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். அந்த பெண் வெளிநாட்டில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றிய வந்துள்ளார்.
அவரது கணவர் பல மாதங்களாக பிள்ளைகளை கைவிட்டுச் சென்றமையால் இடிந்து விழும் நிலையில் இருந்த சிறிய மண் வீடொன்றில் அவரது மகள்கள் இருவரும் வசித்து வந்துள்ளனர்.

இந்தச் செய்தி ஊடகங்களில் வெளியானவுடன் உடனடி கவனம் செலுத்திய குவைத்தில் உள்ள இலங்கை தூதரகமும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பான அமைப்பும் நிமாலி நிலுஷிகா என்ற அந்த பெண்ணை நாட்டிற்கு வரவழைக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
ஐந்து நாட்களுக்குள் விமான டிக்கெட்டுகள் அனுப்பி அவரை இலங்கைக்கு அனுப்ப ஏற்பாடு செய்தனர்.
தாய் நாடு திரும்புவதனை அறியாத பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பியுள்ளனர். வீடு திரும்பியவர்கள் தாயை கண்டு கதறி அழும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.
இன்றைய உலக ஒழுங்கை டொனால்ட் ட்ரம்பால் மாற்ற முடியுமா..! 10 மணி நேரம் முன்
உண்மையை மறைத்த கோமதி-மீனாவிற்கு, பாண்டியன் செந்தில் கொடுத்த தண்டனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam