வத்திக்கானில் மோசடியான முறையில் அருட்தந்தையாக முயற்சித்த இலங்கையர் - வெளிவரும் அதிர்ச்சி தகவல்கள்
உரோமையில் இலங்கையர் ஒருவர் மோசடியான முறையில் அருட்தந்தையாக முயற்சித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இவர் தியாக்கோன் பட்டத்தையும் சட்டத்திற்கு முரணாக பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த இலங்கையர் சுவிட்சர்லாந்தை வசிப்பிடமாகக் கொண்டவர் என்று கூறப்படுகின்றது.
விசாரணைகள்
இவர் அருட்தந்தையாவதற்கான கல்வித் தகைமைகளை முழுமையாக பூர்த்தி செய்யாமல், திருச்சபையின் சட்டத்திட்டங்களுக்கு முரணான வகையில் அருட்தந்தையாக முயற்சித்துள்ளதுடன் தியாக்கோன் பட்டத்தையும் மோசடியான முறையில் பெற்றுக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தியாக்கோன் பட்டத்தைப் பெற்றுக் கொண்டதன் பின்னர், சம்பிரதாயத்தின் படி அவருடை முழுமையான தகவல்கள் மற்றும் பின்னணி தொடர்பில் சரிபார்க்கப்பட்டபோது அது முழுதும் போலியானவை என்று கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த நபர் அருட்தந்தையாக பிரகடனப்படுத்தப்படும் படிமுறை வத்திக்கானால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் வத்திகானின் உரிய தரப்பினரிடம் மின்னஞ்சல் வாயிலாக விசாரித்தபோது, குறித்த விடயம் தற்போது விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவும், விசாரணைகள் நிறைவுற்றதன் பின்னர் மோசடி செய்த குறித்த நபர் தொடர்பான விபரங்கள் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படும் என்று ஆரம்ப கட்டத் தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன.
தலை குனிவு
மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் இலங்கையர் என்றன அடிப்படையில், இலங்கை ஆயர் மன்றத்திடம் தகவல் கோர முற்பட்டபோதும் அது பலனளிக்கவில்லை.
வத்திக்கானில் இலங்கையர் ஒருவர் இவ்வாறு மோசடியான முறையில் அருட்தந்தையாக முயற்சித்தமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
சாதாரணமாக, கத்தோலிக்க திருச்சபையில் அருட்தந்தையாக வேண்டும் என்றால் அவருடைய கல்வி வருடங்கள் 7 தொடக்கம் 8 வருடங்களாகும் என்று கூறப்படுகின்றது.
எவ்வாறாயினும், குறித்த நபர் இந்த விதிமுறைகளை மீறி மோசடியான முறையில் அருட்தந்தையாக முயற்சித்துள்ளமை பெரும் சிக்கலை தோற்றுவித்துள்ளது.
இது இலங்கையர்களுக்கு பெரும் தலை குனிவு என்று கூறப்படுவதுடன் இது தொடர்பில் முறையான நடவடிக்கையை இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் சார்பில் இலங்கை ஆயர் மன்றம் செய்ய தவறும் பட்சத்தில் இவ்வாறான செயற்பாடு ஐரோப்பா முழுவதும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 4ஆம் நாள் மாலை திருவிழா





அமெரிக்காவுடன் மோதல்... எலோன் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்களை குறிவைக்கும் சீனா News Lankasri
