பிரிப்படாத இலங்கைக்குள் நிரந்தர தீர்வை அடைய எமக்கு உதவுங்கள்! எரிக் சொல்ஹெய்மிடம் மனோ கணேசன் கோரிக்கை (Photos)

Mano Ganeshan Sri Lankan political crisis
By Jenitha Dec 17, 2022 03:05 PM GMT
Report

உங்கள் அனுபவத்தை பயன்படுத்த இதுதான்  நல்ல தருணம் எனவும் பிரிப்படாத இலங்கைக்குள் நிரந்தர தீர்வை அடைய எமக்கு உதவுங்கள் என இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெயிமிடம் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார். 

தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் மற்றும் இலங்கை வந்துள்ள எரிக் சொல்ஹெயிம் ஆகியோருக்கு இடையில் நடந்த சந்திப்பின் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இதன்போது எரிக் சொல்ஹெய்ம் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்ததாவது,

சர்வ கட்சி மாநாடு

”நான் ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று அவரது காலநிலை ஆலோசகராக இங்கே வந்துளேன். இந்த சந்திப்பில், மனோ கணேசன் எனக்கு சமீபத்தில் ஜனாதிபதி நடத்திய சர்வ கட்சி மாநாட்டை பற்றி எடுத்து கூறினார். அது நல்லது.

பிரிப்படாத இலங்கைக்குள் நிரந்தர தீர்வை அடைய எமக்கு உதவுங்கள்! எரிக் சொல்ஹெய்மிடம் மனோ கணேசன் கோரிக்கை (Photos) | Sri Lankan Political Crisis Mano Ganeshan

இந்நாட்டில் இனப்பிரச்சினை தீர இது நல்ல வேளை. இந்நாட்டில் சிங்கள, வடக்கு கிழக்கு தமிழர், முஸ்லிம்களுடன், இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் சமமாக இணைந்து வாழ விரும்புவதை அவர் எனக்கு கூறினார்.

மேலும், பெருந்தோட்டங்களில் வறுமை நிலையில் வாழும் மக்களை பற்றியும் கூறினார். உணவின்மை, வறுமை காரணமாக துன்புறும் அவர்கள் மீது சர்வதேச சமூகம் விசேட கவனம் செலுத்த வேண்டும் என நான் விரும்புகிறேன்.

நண்பர் மனோ கணேசன், தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்ற மூன்று மொழிகளையும் இங்கு பேசுகிறார். அது மிகவும் சிறந்தது. அவரது பிறந்த நாளுக்கு எனது வாழ்த்துக்கள்.” என்றார். 

இச்சந்திப்பு தொடர்பில் மனோ கணேசன் தெரிவித்ததாவது,

”வரலாற்றில் எல்லோரும் தவறிழைத்துள்ளோம். கடைசி சமாதான முயற்சி தோற்றது. இதற்கு சில தரப்புகளோ, அனைத்து தரப்புகளுமோ காரணம். அதுபற்றி ஆராய்ச்சி செய்ய இது வேளையல்ல. அது எனது வேலையுமல்ல.

மலையக மக்கள் 

இப்போது நாம் வரலாற்றில் இருந்து பாடம் படித்துள்ளோம். ஆகவே முன்னோக்கி நகர எமக்கு உதவுங்கள். இங்கே நண்பர் எரிக் சொல்ஹெயிம் கூறியதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

பிரிப்படாத இலங்கைக்குள் நிரந்தர தீர்வை அடைய எமக்கு உதவுங்கள்! எரிக் சொல்ஹெய்மிடம் மனோ கணேசன் கோரிக்கை (Photos) | Sri Lankan Political Crisis Mano Ganeshan

எரிக் சொல்ஹெயிம் இலங்கையில் மிகவும் அறியப்பட்ட ஒரு வெளிநாட்டுக்காரர். அவரது தொடர்புகளையும், அனுபவத்தையும் பயன்படுத்த இதுதான் வேளை. பிரிப்படாத இலங்கைக்குள் நிரந்தர தீர்வை அடைய எமக்கு உதவுங்கள். உங்கள் நண்பர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதை எடுத்து கூறுங்கள்.

இதை நீங்கள் செய்து இந்நாட்டின் இனப்பிரச்சினை தீர்வுக்கு உதவுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் நான் என் பிறந்த நாளை கொண்டாடுவேன். இலங்கையின் சமூக பரப்பில் ஏற்பட்டுள்ள புதிய வளர்ச்சி போக்கை நீங்கள் கவனிக்க வேண்டும்.

கடந்த காலங்களை விட இன்று இந்திய வம்சாவளி மலையக மக்கள் ஒரு இனமாக வளர்ச்சி அடைந்துள்ளார்கள். அவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர் மட்டுமே, அவர்களது பிரச்சினை பெருந்தோட்ட பிரச்சினைகள் மட்டுமே, என்ற காலம் மாறி விட்டது.

இன்றைய இனப்பிரச்சினை தீர்வில் அவர்களுக்கும் சம பங்கு வேண்டும். வடக்கு கிழக்கு சகோதர உடன்பிறப்பு, முஸ்லிம் உடன்பிறப்பு மற்றும் சிங்கள உடன்பிறப்புகளுடன் நாம் சமமாக வாழ விரும்புகிறோம். இனிவரும் இனப்பிரச்சினை தீர்வு முயற்சிகளில் இந்த புது வளர்ச்சி போக்கை கவனத்தில் கொள்ளுங்கள்” என்றார். 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US