உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் குறித்து டக்ளஸ் தகவல் (Video)
உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் குறித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா ஊடகங்களுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் யாழ்ப்பாணம் மாவட்ட வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்றைய தினம் (18.03.2023) நடைபெற்றுள்ளது.
இதன்போது, உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்றைய தினம் (19.03.2023) நள்ளிரவுடன் நிறைவடைவது பற்றி ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளித்ததுடன், நிதி கிடைத்தால் எந்த நேரமும் தேர்தல் நடக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் உள்ள உள்ளூராட்சி மன்றங்களில் ஈழ மக்கள்
ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், கட்சியின்
முக்கியஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மரண வீட்டில் அரசியல்.. 1 நாள் முன்
இந்தியாவுக்கு வரும் புடின்: விமானத்தில் கொண்டு வரப்பட்ட Aurus Senat கார்! மிரட்டும் தனித்துவம் News Lankasri