உள்ளூராட்சி மன்றங்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு
இலங்கையில் உள்ள 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ பதவிக் காலம் இன்று (19) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.
அதன் பிரகாரம் 29 மாநகர சபைகள், 36 மாநகர சபைகள் மற்றும் 275 உள்ளூராட்சி சபைகளின் பதவிக்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளது.
நாடளாவிய ரீதியில் 341 உள்ளூராட்சி மன்றங்கள் உள்ள போதிலும் காலி மாவட்டத்தில் எல்பிட்டிய உள்ளுராட்சி மன்றம் ஸ்தாபிக்கப்படுவதில் தாமதம் ஏற்பட்டதால் அந்த உள்ளூராட்சி சபையின் பதவிக்காலம் இன்று முடிவடையாது.
சட்டத்திற்கு அமைய முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்
இன்று (19) நள்ளிரவுக்குப் பின்னர் உள்ளூராட்சி மன்றங்களின் நிர்வாகப் பணிகள் ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற செயலாளர்களின் கீழ் கொண்டு வரப்படும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான சட்டத்திற்கு அமையவே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர குறிப்பிட்டார்.
தற்போது பாவனையில் உள்ள உத்தியோகபூர்வ வாகனங்களை ஒப்படைக்குமாறு உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
