ஹமாஸ் பிடியில் சிக்கிய இலங்கையர் உயிரிழப்பு
ஹமாஸ் அமைப்பினால் பணய கைதியாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என சந்தேகிக்கப்பட்ட இலங்கை பிரஜை உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தடுத்து வைக்கப்பட்டிருந்த சுஜித் யடவர பண்டார என்ற இலங்கையரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் பொலிஸார் உறுதிப்படுத்தியதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும், ஹமாஸ் அமைப்பின் தாக்குதலிலேயே சுஜித் யடவர பண்டார உயிரிழந்திருக்கலாம் என நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் பொலிஸார் உறுதி
உயிரிழந்த நபர் அவர்தான் என்பதை உறுதி செய்துக்கொள்ளும் வகையில், அவரது பிள்ளைகளின் மரபணு மாதிரிகளை ஒத்துப் போவதாக இஸ்ரேல் பொலிஸார் உறுதிப்படுத்தினார்கள் என அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில், உயிரிழந்தவரின் உடலை இலங்கைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இஸ்ரேலுக்கான நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 12 ஆம் நாள் மாலை திருவிழா





இந்தியா மீதான ட்ரம்பின் கடும் கோபத்திற்கு உண்மையான காரணம்... ரஷ்ய எண்ணெய் இறக்குமதி அல்ல News Lankasri

அறிவுக்கரசி கையில் வீடியோ.. குணசேகரனை மாட்டி விடுவாரா! - எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு ப்ரோமோ Cineulagam
