காணாமல்போயிருந்த மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு
நுவரெலியா - ஹட்டன் பகுதியில் நான்கு நாட்களாக காணாமல்போயிருந்த ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஹட்டன், அரச பேருந்து நிலையத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவரே, இவ்வாறு இன்று (03.11.2023) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஷானன் தேயிலை தோட்டத்தில் இந்த ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் விசாரணை
இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்ட நபர் ஷனன் தோட்டத்தைச் சேர்ந்த 49 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையான ராமையா மனோகர் (வயது 49) என அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஹட்டன் அரச பேருந்து நிலையத்தில் பணிப்புரியும் குறித்த நபர், நான்கு நாட்களாக வேலைக்குச் செல்லவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், உயிரிழந்தவரின் மனைவி ஹட்டன் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் சடலம் இன்று மீட்க்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, சடலத்தை ஹட்டன் நீதவான் பரிசோதித்ததன் பின்னர், திக் ஓயா ஆதார வைத்தியசாலையின் சட்ட வைத்தியரிடம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படும் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.





அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
