பாரிய திருப்புமுனையாக மாறிய நெதன்யாகுவின் ஒற்றை வார்த்தை! கமெனியின் தலையெழுத்தை மாற்றியமைத்த மொசாட்
ஈரானிய முன்னாள் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமெனி படுகொலை செய்யப்பட்டமையானது, பல வருடங்களாக இஸ்ரேலிய உளவுத்துறை மேற்கொண்டு வந்த ஒரு நடவடிக்கையின் பகுதி என தெரிவிக்கப்படுகின்றது.
ஈரானின் தெஹ்ரானில் உள்ள கிட்டத்தட்ட அனைத்து போக்குவரத்து கெமராக்களும் பல ஆண்டுகளாக ஹேக் செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சனிக்கிழமை, அமெரிக்க - இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அயதுல்லா அலி காமெனி கொல்லப்பட்ட போது தெஹ்ரானில் உள்ள பாஸ்டர் தெருவுக்கு அருகில் மூத்த ஈரானிய அதிகாரிகள் பணிக்கு சென்றதை, இஸ்ரேலியர்கள் கண்காணித்து கொண்டிருந்ததாக சர்வதேச ஊடகங்களின் ஆய்வு செய்திகள் குறிப்பிடுகின்றன.
இலங்கை கடற்பரப்பில் 180 பயணிகளுடன் விபத்துக்குள்ளான ஈரான் கப்பல்! 32 பேர் வைத்தியசாலையில்: தொடரும் மீட்பு பணி
ஹெக் செய்யப்பட்ட சிசிடிவிகள்
குறித்த பாதுகாப்பு கெமராக்கள் மூலம், நெருக்கமாகப் பாதுகாக்கப்பட்ட வளாகத்தின் ஒரு பகுதியின் செயல்பாடுகளை இஸ்ரேலுக்கு இலகுவாக பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்ததாக கூறப்படுகின்றது.

இதன் மூலம், ஈரானிய பாதுகாப்புக் காவலர்களில் உறுப்பினர்களின் முகவரிகள், பணி நேரம், அவர்கள் வேலைக்குச் சென்ற வழிகள் மற்றும் மிக முக்கியமாக, அவர்கள் வழக்கமாக யாரைப் பாதுகாக்கவும் போக்குவரத்து செய்யவும் நியமிக்கப்பட்டார்கள் என்பது பற்றிய தகவல்களை இஸ்ரேலிய உளவுத்துறை பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இஸ்ரேலிய உளவுத்துறையும் மத்திய புலனாய்வு பிரிவும் கடந்த சனிக்கிழமை காலை அலி கமெனி தனது அலுவலகங்களில் எத்தனை மணிக்கு இருப்பார், யார் அவருடன் இணைவார்கள் என்பதைத் துல்லியமாகக் கண்டறிந்துள்ளன.
சனிக்கிழமை, காலை தெஹ்ரானின் மையப்பகுதியில் உள்ள தலைமைத்துவ வளாகத்தில் ஒரு சந்திப்பை இஸ்ரேலிய உளவுத்துறை கண்டறிந்துள்ளது.
பல வருட கண்காணிப்பு
இந்நிலையில், குறித்த பகுதியில் கமெனி இருப்பார் என அமெரிக்க மத்திய புலனாய்வு பிரிவு கணித்திருந்த நிலையில் சனிக்கிழமை குறித்த தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பில்லியன் கணக்கான தரவு புள்ளிகளை பகுப்பாய்வு செய்ய இஸ்ரேல் சமூக வலைப்பின்னல் பகுப்பாய்வு எனப்படும் கணித முறையைப் பயன்படுத்தியதாக புலனாய்வு அமைப்பான மொசாட் அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாக கடந்த ஆண்டில் ஜூன் மாதம் நடந்த 12 நாள் போரில், ஒரு டஜனுக்கும் மேற்பட்ட ஈரானிய அணு விஞ்ஞானிகள் மற்றும் உயர்மட்ட இராணுவ அதிகாரிகள் சில நிமிடங்களில் படுகொலை செய்யப்பட்டபோது, மொசாட் உளவுத்துறையின் தீவிரத்தன்மை வெளிக்காட்டப்பட்டது.
இந்நிலையில், இஸ்ரேலிய உளவுத்துறையின் தகவல்களை தொடர்ந்து, ட்ரம்பிடம் நெதன்யாகு குறிப்பிட்ட ஒற்றை வார்த்தையே கமெனியின் மரணத்திற்கு காரணமாக அமைந்தது என தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலுக்கு ஒப்புதல்
பெப்ரவரியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கும் இடையேயான தொலைபேசி அழைப்பு ஈரானுக்கு எதிரான தாக்குதல்களைத் தொடங்குவதற்கான திருப்புமுனையாக அமைந்துள்ளது.

கடந்த 23ஆம் திகதி அன்று, ஈரானிய முன்னாள் தலைவர் அலி கமேனியும் அவரது ஆலோசகர்களும் தெஹ்ரானில் கூடுவார்கள் என்ற உளவுத்துறைத் தகவலை நெதன்யாகு ட்ரம்புடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
இந்தத் தகவல் சரிபார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இராஜதந்திர விருப்பங்கள் தீர்ந்துவிட்டதாக ட்ரம்ப் கூறி, தாக்குதலுக்கு இறுதி ஒப்புதல் அளித்ததாகக் கூறப்படுகிறது.
கமெனியின் மரணத்தை பல வருடங்களாக, குறித்த உளவுத்துறை அமைப்புக்கள் எதிர்பார்த்து கண்காணித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
உதவி செய்த மீனாவையே பிரச்சனையில் சிக்க வைத்த மயில், என்ன இப்படி பண்ணிட்டாங்க... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam