ஒளிந்திருக்கும் இடம் முக்கியமல்ல! இஸ்ரேலின் அடுத்த இலக்காகும் கமெனியின் வாரிசு
இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் முன்னாள் ஈரானிய உயர்மட்ட தலைவர் அலி கமெனிக்குப் பிறகு எந்த வாரிசையும் அழிப்போம் என தெரிவித்துள்ளார்.
கமெனிக்குப் பிறகு நியமிக்கப்படும் எந்த ஈரானிய தலைவரையும் கொல்ல இஸ்ரேலிய இராணுவம் தயராக உள்ளது என்றும் இஸ்ரேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தலைவர்
மேலும், "இஸ்ரேலை அழிக்கவும், அமெரிக்காவையும் சுதந்திர உலகத்தையும் பிராந்திய நாடுகளையும் அச்சுறுத்தவும், ஈரானிய மக்களை ஒடுக்கவும் திட்டத்தைத் தொடர்ந்து வழிநடத்த ஈரானிய பயங்கரவாத ஆட்சியால் நியமிக்கப்பட்ட எந்தவொரு தலைவரும், அழிவை நோக்கும் ஒரு தெளிவான இலக்காக இருப்பார்" என்று காட்ஸ் கூறியுள்ளார்.
כל מנהיג שימונה ע"י משטר הטרור האיראני כדי להמשיך ולהוביל את התוכנית להשמדת ישראל, לאיים על ארה"ב והעולם החופשי ומדינות האזור, ולדכא את העם האירני - יהיה יעד חד משמעי לחיסול.
— ישראל כ”ץ Israel Katz (@Israel_katz) March 4, 2026
לא חשוב מה שמו והמקום בו יסתתר.
רה"מ ואני הנחינו את צה"ל להיערך ולפעול בכל האמצעים למימוש המשימה כחלק…
அது மாத்திரமன்றி, "அவரது பெயர் என்ன, அவர் எங்கு மறைந்திருக்கிறார் என்பது முக்கியமல்ல," என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஈரானின் திறன்களை அழிக்கவும், ஈரானிய மக்கள் தங்கள் அரசாங்கத்தை "கீழே தள்ளுவதற்கான நிலைமைகளை உருவாக்கவும்" இஸ்ரேல் அமெரிக்காவுடன் தொடர்ந்து செயல்படும் என்றும் காட்ஸ் உறுதியளித்துள்ளார்.
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri