மத்திய கிழக்கில் தொடரும் போர் பதற்றம் - இலங்கையில் 85 இடங்களில் பலத்த பாதுகாப்பு
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் சூழ்நிலையை அடுத்து இலங்கையில் 85 இடங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இன்று (04) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார்.
85 இடங்களில் பலத்த பாதுகாப்பு
"வெளிநாட்டு தூதரகங்கள் மற்றும் உயர் ஸ்தானிகராலயங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 85 தூதரகங்கள், உயர் ஸ்தானிகராலயங்கள் மற்றும் அவற்றின் உத்தியோகபூர்வ இல்லங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், எம்மைப் போன்ற ஒரு நாடு எக்காரணம் கொண்டும் இவ்வாறானதொரு போரில் ஒரு இடைத்தரகராகவோ அல்லது இரையாகவோ மாறக்கூடாது.
ஆபத்தில் இலங்கையர்கள்
போர் காரணமாக பெருமளவான இலங்கையர்கள் ஆபத்துக்குள்ளாகியுள்ளனர். உலகப் பொருளாதாரமே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. இதை யார் ஆரம்பித்திருந்தாலும், இது இப்போது எந்தளவுக்கு விரிவடைந்திருந்தாலும், இது விரைவில் முடிவடையும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
போர் ஒருபோதும் உலகிற்கு முன்னேற்றத்தைக் கொண்டுவரவில்லை. அரசியல் தேவைகளுக்கு மத்தியில் சாதாரண மக்களே பாதிக்கப்பட்டவர்களாக மாறினர். போரில் ஒரு பக்கத்தை ஆதரிக்க எவரும் முயற்சிக்கவில்லை. அதாவது எங்களைப் போன்ற ஒரு நாடு இந்தப் போரில் இடைத்தரகர்களாகவோ அல்லது போரின் இரையாகவோ மாறக்கூடாது.
எனவே, இந்தப் போர் மோதல்களைத் தவிர்ப்பதற்காக எங்கள் தரப்பில் சொல்லாலும் செயலாலும் செய்யக்கூடிய அனைத்தையும் செய்து வருகிறோம்." என்றும் தெரிவித்துள்ளார்.
திடீரென கண்ணீர்விட்டு அழுத சோழன், அதைப்பார்த்த நிலா செய்த விஷயம்.. அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam
பிரிட்டிஷ் விமானப் படை தளத்தின் மீது தாக்குதல்: அதிநவீன போர்க்கப்பலை அனுப்ப பிரித்தானிய திட்டம் News Lankasri
ஐரோப்பிய நாடொன்றுக்கு எச்சரிக்கை விடுத்த டிரம்ப்: வர்த்தகத்தை நிறுத்த அமெரிக்கா திட்டம் News Lankasri
குணசேகரன் ஜாமினுக்கு வந்த சிக்கல், செக் வைத்தது யார் தெரியுமா?... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam