ஈழத்து மருமகன் விஜய்! தமிழ்நாட்டு முதலமைச்சரிடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
ஈழத்து மருமகன் என்ற ரீதியில், எமது வாழ்வாதாரப் பிரச்சினைக்கான தீர்வை தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்யிடம் கேட்பதற்கு எங்களுக்கு முழுமையான உரிமை இருக்கின்றது என்று அகில இலங்கை கடற்றொழிலாளர் மற்றும் தொழிலாளர் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், "எதிர்வரும் 15ஆம் திகதி மீள ஆரம்பமாகும் இழுவைமடித் தொழில் இந்தியாவில் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலத்தினை முன்னிட்டு 60 நாள்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இழுவைமடி மீன்பிடித் தொழிலானது, எதிர்வரும் 15 ஆம் திகதி மீள ஆரம்பமாகவிருக்கின்றது.
23 வருடகால பிரச்சினை
இந்தியாவில் இழுவைமடித் தடை நீங்குவது அந்த நாட்டு கடற்றொழிலாளர்களுக்கு வசந்தகாலமாக இருக்கலாம். ஆனால், அது எமக்குக் கடுமையான அழிவுக் காலமாகும்.

இந்திய - இலங்கை கடற்றொழிலாளர் பிரச்சினையானது ஏறத்தாழ 23 வருடங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்றது.
எமது அரசிடமும் இந்தியத் தரப்பிடமும் பலமுறை கோரிக்கைகளை முன்வைத்தும், இழுவைமடித் தொழிலை முழுமையாக நிறுத்துவதற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான முயற்சிகளையும் இரு நாட்டு அரசுகளும் எடுக்கவில்லை.
இது தொடர்பில் பல பேச்சுகள் நடத்தப்பட்டு எட்டப்பட்ட தீர்மானங்களை அமுல்படுத்துவதற்கும் இரு தரப்பும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. முன்னர் இருந்த தமிழக முதலமைச்சர்களை விடவும், தற்போதைய முதலமைச்சர் ஜோசப் விஜய் எம் மீது அதிக கருணை கொண்டு எமது கடற்றொழிலாளர் பிரச்சினையில் தலையிட்டு ஆக்கபூர்வமான தீர்வைப் பெற்றுத்தர வேண்டும்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்களுக்கிடையிலான நேரடிப் பேச்சு ஒன்று இடம்பெற்று, இழுவைமடிப் படகுகளின் அத்துமீறல்கள் தொடர்பில் ஒரு இறுதியான இணக்கப்பாடு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று அன்பான கோரிக்கையை முன்வைக்கின்றோம்” என குறிப்பிட்டுள்ளார்.
கருணா குழுவின் முக்கியஸ்தர் படுகொலை - ஒட்டுமொத்த தமிழர்களை காக்க அந்தவொரு இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!
இன முரண்பாட்டின் உச்சமே தமிழ் சிங்கள கிறிஸ்தவ திருச்சபைகளின் பிளவு 15 மணி நேரம் முன்
தன்னிடம் எக்கச்சக்கமான நகை இருப்பதாக சமூக ஊடகங்களில் பெருமையடித்துக்கொண்ட பெண்: நிகழ்ந்த துயரம் News Lankasri
பாரதிராஜாவுடன் கடைசி சந்திப்பு: நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்த சினேகன் - கன்னிகா - வைரல் காணொளி Manithan