விமலின் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி - திசை மாறும் தென்னிலங்கை அரசியல் களம்!
இலங்கையின் அண்மைய அரசியல் நகர்வுகளில், குறிப்பாக தென்னிலங்கை அரசியல் களம் மிகத் தீவிரமான பாதையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது எனலாம்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச (Shashi Weerawansa) தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு பெரும் பேசுபொருளாகியுள்ளது.
முறையற்ற வகையில் பெற்றுக்கொள்ளப்பட்ட இராஜதந்திர கடவுச்சீட்டை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் விதிக்கப்பட்ட 02 வருட சிறைத்தண்டனை மற்றும் அபராதத்திற்கு எதிராக சஷி வீரவன்ச தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (11) நிராகரித்தது.
கடந்த காலங்களில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து, முறையற்ற வழியில் இராஜதந்திர கடவுச்சீட்டை (Diplomatic Passport) பெற்றுக் கொண்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் சஷி வீரவங்சவுக்கு எதிராக நீண்டகாலமாக வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், குறித்த மறு நிராகரிப்பு தற்போது தென்னிலங்கை அரசியலில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தியுள்ளது என அரசியல் ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர். இது உள்ளிட்ட பல முக்கிய அரசியல் நகர்வுகளை ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி,
கருணா குழுவின் முக்கியஸ்தர் படுகொலை - ஒட்டுமொத்த தமிழர்களை காக்க அந்தவொரு இளைஞர் எடுத்த விபரீத முடிவு..!