ஆளும் கட்சி உறுப்பினர் ஹசித நிரோசனின் கருத்து கட்சியின் நிலைப்பாடு அல்ல
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ விஜேசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடத் தயாராகி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
இந்த கருத்து , கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இவ்வாறான உரைகளை நிகழ்த்தும்போது அவை தனிப்பட்ட முறையில் இடம்பெறுவதாகவும், அந்த கூற்றுகளுக்கான பொறுப்பு சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரையே சாரும் என்றும் அபேசிங்க சுட்டிக்காட்டினார்.

இவ்விவகாரம் தொடர்பாக கட்சிக்குள் எவ்வித பொதுவான கலந்துரையாடல்களும் நடத்தப்பட்டு தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் எதிர்கால அரசியல் பயணம் எதிர்வரும் செப்டம்பர் 6-ஆம் திகதி களுத்துறை மாவட்டத்திலிருந்து ஆரம்பிக்கப்படும் எனவும், அங்கு ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் மக்களுடன் இணைய எதிர்பார்ப்பதாகவும் பொதுச்செயலாளர் தெரிவித்துள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீடிப்பது தொடர்பாக தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் அது குறித்து மேலும் விவாதித்து தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்து வரும் எதிர்ப்புகள் குறித்தும் கட்சியின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri