மீட்சியடையும் இலங்கை பொருளாதாரம்: மத்திய வங்கியின் சாதகமான அறிவிப்பு
இலங்கையின் பொருளாதாரம் (Sri Lankan economy) 2023ஆம் ஆண்டின் அரையாண்டில் மீட்சியடைவதற்கான சமிக்ஞைகளை காட்டியதாக இலங்கை மத்திய வங்கியின் (CBSL) 2023ஆம் ஆண்டிற்கான பொருளாதார மீளாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2022ஆம் ஆண்டில் கடும் பொருளாதார நெருக்கடியை (Economic Crisis) எதிர்நோக்கிய இலங்கை, தீர்க்கப்படாத பல்வேறு பிரச்சினைகளுடன் 2023ஆம் ஆண்டிற்குள் பிரவேசித்திருந்தது.
இந்நிலையில், மெதுவடைந்த வட்டி வீதங்கள் மற்றும் வெளிநாட்டுத் துறை அழுத்தங்களின் தளர்வடைதல் என்பவற்றிற்கு மத்தியில் புதுப்பிக்கப்பட்ட பேரண்ட பொருளாதார உறுதிப்பாட்டின் துணையுடன் பொருளாதார மீட்சி பாதைக்கு இலங்கை சென்றுள்ளது.
கட்டுப்படுத்தப்பட்ட வீழ்ச்சி
இலங்கையின் பணவீக்கமானது, 2022ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் வரலாறு காணாத பணவீக்க மட்டத்தினை (Inflation rate) அடைந்தது.
அதன் பின்னர், இயல்புக்கு திரும்பிய உள்நாட்டு நிரம்பல் நிலைமை, உலகளாவிய பண்ட விலைக்குறைவு மற்றும் இலங்கை ரூபா வலுவடைதல் போன்ற காரணிகளால் 2023ஆம் ஆண்டு இறுதிப்பகுதியில் பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டது.
அத்துடன், வேலையின்மை வீதம் 2023ஆம் ஆண்டு 4.7 சதவீதமாக தொடர்ந்தும் மாற்றமின்றி காணப்பட்டது.
தொழில் வாய்பிற்காக வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை 2023ஆம் ஆண்டில் அதிகரித்து காணப்பட்டதோடு 2022ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குறைவடைந்துள்ளது.
படிப்படியான வளர்ச்சி
அதேவேளை, 2023ஆம் ஆண்டு இறக்குமதிகளில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வீழ்ச்சியின் காரணமாக வர்த்தக பற்றாக்குறை சுருக்கமடைந்தது.
மேலும், வெளிநாட்டு செலாவணிக் கொடுக்கல் வாங்கல்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டமையினாலும் நெகிழ்ச்சித்தன்மை வாய்ந்த செலாவணி வீதக் கட்டமைப்பொன்றினை மத்திய வங்கி பின்பற்றியமையினாலும் இலங்கை ரூபாவின் பெறுமதி 2023ஆம் ஆண்டு உயர்வடைந்துள்ளது.
அதனைப்போன்று, முக்கிய வரி சீர்திருத்த கொள்கைகள் அரச வருவாயை அதிகரித்துள்ளதோடு 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஆரம்ப மிகையொன்று 1950ஆம் ஆண்டிலிருந்து ஆறாவது தடவையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவற்றிற்கமைய, சுதந்திரத்துக்கு பின்னர் பாரிய வீழ்ச்சியை சந்தித்த இலங்கையின் பொருளாதாரம், 2023ஆம் ஆண்டு படிப்படியான வளர்ச்சியை காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
