வீசா சர்ச்சை குறித்து ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள விளக்கம்
வீசா சர்ச்சை குறித்து குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து விளக்கமளிக்க உள்ளனர்.
வெளிநாட்டவர்களுக்கு வீசா வழங்குவது தொடர்பிலான பணிகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குவதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் குறித்து தெளிவூட்டப்படவுள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்கள தொழிற்சங்கப் பிரதிநிதிகள் இவ்வாறு விளக்கமளிக்கத் தீர்மானித்துள்ளனர்.
புதிய வீசா முறைமை
புதிய வீசா முறைமையினால் நாட்டின் பாதுகாப்பிற்கும் ராஜதந்திர ரீதியில் எழக்கூடிய பிரச்சினைகள் தொடர்பிலும் தெளிவூட்டப்படவுள்ளது.
ஜனாதிபதி முதல் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் மற்றும் அரசியல் தலைமைகளுக்கு இந்த நிலைமைகள் தெளிவூட்டப்பட உள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பொதுப் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், நாளைய தினம் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் சந்திப்பு ஒன்றை நடத்த உள்ளார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 3 நாட்கள் முன்
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan
இந்தியாவில் குவிய போகும் கோடிகள்; இந்தியா - ஐரோப்பா FTA ஒப்பந்தத்தில் எந்த துறைகளுக்கு லாபம்? News Lankasri