சுற்றுலாத்துறை அமைச்சு வகுக்கும் திட்டம்
2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் சுற்றுலாப்பயணிகளின் வருகையின் மூலம் இலங்கை 1025 மில்லியன் டொலர்களை ஈட்டியுள்ளதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ (Harin Fernando) தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், "கடந்த மூன்று மாதங்களிற்குள் 635,784 சுற்றுலாப்பயணிகளின் வருகையிலிருந்து மட்டுமே இந்த வருமானம் பெறப்பட்டுள்ளது.
இதனை 2023ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 89% ஈர்க்கக்கூடிய வளர்ச்சியைக் எடுத்துக் காட்டுகின்றது.
புதிய திட்டம்
இதற்கமைய, இலங்கை சுற்றுலாத்துறையானது, 2024ஆம் ஆண்டிற்கான இலக்குகளை நிர்ணயித்துள்ளதுடன் சுமார் 2.3 மில்லியன் பயணிகளை ஈர்த்து 4 பில்லியன் டொலருக்கும் அதிகமான வருமானத்தை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
எனவே, உயர்தர உல்லாசப் பயணிகளை வரவேற்பதில் அதிக கவனம் செலுத்தி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) ஒரு பார்வையாளருக்கான சராசரி செலவீனத்தை 4,000 டொலராக அதிகரிக்கச் செயற்படுகிறது.
இதற்கமைய, குறிப்பாக அதிக செலவு செய்யும் சுற்றுலாப்பயணிகளின் பிரிவை இலக்காகக் கொண்டு, நாளொன்றுக்கு 500 டொலருக்கும் அதிகமாக செலவு செய்யும் 2.5 மில்லியன் சுற்றுலாப்பயணிகளை கொண்டிருப்பதே நோக்கமாகும்.
மேலும், இது தற்போது மொத்த சுற்றுலாப்பயணிகளின் வருகையில் 33 - 35% ஆக காணப்படுகின்றது.
இந்த மூலோபாய அணுகுமுறை மூலம் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நாட்டின் மீது சுற்றுலாவின் பொருளாதார தாக்கத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என சுட்டிக்காட்டியுள்ளார்.
சா.தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு! மே மாதம் முதல் வழங்கப்படும் கொடுப்பனவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |