வெளிநாடொன்றில் சிறைப்பிடிக்கப்பட்ட 48 இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி
மியன்மார் எல்லையில் உள்ள மியாவாடி பகுதியில் இணையக் குற்றவாளிகளால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 48 இலங்கையர்களை மீட்பது சவாலானது என்று மியான்மரில் உள்ள இராணுவ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஆயுதக் குழுக்களால் இந்த பகுதி கட்டுப்படுத்தப்படுகின்றமையே இதற்கான காரணம் என்று மியன்மார் இராணுவம் தெரிவித்துள்ளது.
முன்னதாக இணையக் குற்றங்களில் ஈடுபட்டுள்ளவர்களால், 56 இலங்கையர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர் எனினும் அதில் 8 பேர் மீட்கப்பட்டனர்.
இந்தநிலையில் அவர்களை மியான்மரில் உள்ள மியாவாடியில் இருந்து யங்கோனுக்கு சாலை வழியாக அழைத்துச் செல்வது சவாலானதாக இருப்பதால், தாய்லாந்து வழியாக அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
48 இலங்கையர்களை மீட்பது சவால்
எனினும் மீதமுள்ள 48 இலங்கையர்களை மீட்பது சவாலானதாக மாறியுள்ளதாக மியான்மர் இராணுவ அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டமை ஆபத்தை காட்டுகிறது.
அதேநேரம் அவர்களை மீட்பதற்கான மூலோபாய அணுகுமுறையை உருவாக்க மியன்மார் இராணுவ அரசாங்கம் மேலும் கால அவகாசத்தைக் கோரியுள்ளது.
இதற்கிடையில் இணையக்குற்றங்கள் உட்பட்ட பல்வேறு மோசமான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பல இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கவில்லை.
எனினும் அவ்வாறு விருப்பமில்லாத இலங்கையர்களின் சரியான எண்ணிக்கையை தற்போது கண்டறிய முடியவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

என்ன கொடுமை இது, நான் சீரியல் பார்ப்பதை நிறுத்திவிட்டேன்.. எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள் புலம்பல் Cineulagam

Optical illusion: உங்கள் கண்களை ஒரு நிமிடம் குருடாக்கும் மாயை...இதில் இருக்கும் இலக்கம் என்ன? Manithan

சவுதி தூதருடன் தொடர்பு.,ஊடகங்களில் பரவிய வீடியோ: பங்களாதேஷ் மாடல் மேக்னா ஆலம் அதிரடி கைது! News Lankasri

குணசேகரன் மற்றும் அவரது அம்மா திட்டத்தை தெரிந்துகொண்ட ஜனனி.. எதிர்நீச்சல் சீரியல் அடுத்த அதிரடி புரொமோ Cineulagam
