மகிந்த அமரவீர உட்பட மூன்று முக்கியஸ்தர்களுக்கு எதிரான தீர்மானம் : தடை உத்தரவை நீடித்த நீதிமன்றம்
துமிந்த திசாநாயக்க( duminda dissanayake), லசந்த அழகியவன்ன (lasantha alagiyawanna) மற்றும் மகிந்த அமரவீர (mahinda amaraweera) ஆகியோரை கட்சியில் இருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) செயற்குழுவைத் தடுக்கும் இடைக்காலத் தடை உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இன்று (08) பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை இந்த இடைக்காலத் தடை நீடிக்கப்பட்டுள்ளது.
திசாநாயக்க, அழகியவன்ன மற்றும் அமரவீர ஆகியோரை கட்சியின் அந்தந்த பதவிகளில் இருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழு மார்ச் 30ஆம் திகதி நடைபெற்ற விசேட கட்சிக் கூட்டத்தின் போது தீர்மானித்தது.

மைத்திரியின் சர்ச்சைக்குரிய கருத்து
இதன்படி, தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து திஸாநாயக்கவும், பொருளாளர் பதவியிலிருந்து அழகியவன்னவும், சிரேஷ்ட உப தலைவர் பதவியிலிருந்து அமரவீரவும் நீக்கப்பட்டனர். இதற்கிடையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புதிய மூத்த துணைத் தலைவர், பொருளாளர் மற்றும் தேசிய அமைப்பாளர் ஆகிய மூவரின் பதவிகளுக்கு புதிய அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மஹியங்கனை தொகுதி அமைப்பாளர் கே.பி.குணவர்தன தேசிய அமைப்பாளராகவும், முன்னாள் மேல்மாகாண அமைச்சர் ஹெக்டர் பெத்மகே பொருளாளராகவும், முன்னாள் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க சிரேஷ்ட உப தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஈஸ்டர் தாக்குதலின் மூளையாகச் செயற்பட்டவர்கள் தொடர்பில் அவர் வெளியிட்ட கருத்து சர்ச்சைக்கு மத்தியில், அவர்களால் கூட்டப்பட்ட விசேட கட்சிக் கூட்டத்தின் போது, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan