வெளிநாடுகளிலிருந்து 10 பில்லியன் அமெரிக்க டொலரை நாட்டுக்கு அனுப்பிய இலங்கையர்கள்
கடந்த மாதத்தில் வெளிநாட்டில் பயணியாற்றும் இலங்கை பணியாளர்களினால் மட்டும் 572.4 மில்லியன் அமெரிக்க டொலர்களை கிடைத்துள்ளதாக, தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 1.53 பில்லியன் டொலர்கள் அந்நிய செலவாணியாக இலங்கைக்கு கிடைத்துள்ளது.
இது கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 8.7 வீத அதிகரிப்பு எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு
தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பதவியேற்றதன் பின்னர், புலம்பெயர் தொழிலாளர்கள் அனுப்பிய பணம் 10 பில்லியன் அமெரிக்க டொலர்களை தாண்டியுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுப் பணியாளர்கள் 10.26 பில்லியன் டொலர்களை இலங்கைக்கு வங்கி முறையின் ஊடாக சட்டரீதியாக கொண்டு வருவதற்கு பல சலுகைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
வங்கி முறை மூலம் சட்டப்பூர்வமாக பணம் அனுப்பும் தொழிலாளர்களுக்கு மின்சார வாகன இறக்குமதி உரிமம் வழங்குதல், மனுசவி ஓய்வூதியத் திட்டம், பல்நோக்குக் கடன் திட்டம் அறிமுகம், தொழிலாளர்களுக்காக விமான நிலையத்தில் ஹோப் கேட் என்ற சிறப்பு பிரிவு போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.