இலங்கை சோமாலியாவாக மாறலாம்! மக்கள் தயாராக வேண்டும் - இராதாகிருஷ்ணன் எச்சரிக்கை
இலங்கையில் மிக விரைவில் சோமாலியாவைப் போல பஞ்சம் ஏற்படலாம். அதனை சந்திப்பதற்கு நாம் தயாராக வேண்டும். அரசாங்கத்தின் தீர்க்கதரிசனம் அற்ற செயற்பாடுகளால் இந்த நிலை ஏற்பட்டிருக்கின்றது என நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பதுளை தபாற் கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற மகளிர் தின விழாவில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் பெரும் பாதிப்பை சந்தித்திருப்பவர்கள் பெண்களே. அவர்கள் ஏற்கனவே குடும்ப தலைவிகளாக செயற்பட்டு வருகின்ற நிலையில் இந்த பொருளாதார பின்னடைவு காரணமாக பெரும் பாதிப்பை அவர்கள் சந்தித்திருக்கின்றார்கள்.
பெண்களுடைய பால் நிலை சமத்துவத்தை நாம் பேசிக் கொண்டிருக்கின்றோம். ஆனால் இன்று அந்த சமத்துவம் இருக்கின்றதா? என்ற கேள்வி எழுகின்றது.
இன்று இலங்கையில் பெண்கள் பல வழிகளில் பாதிக்கப்படுகின்றார்கள். குறிப்பாக எங்களுடைய மலையக பெண்களின் பாதிப்பு அதிகமாக இருக்கின்றது. வெளிநாட்டு வேலைக்குச் சென்று திரும்புகின்றவர்களின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது.
வெறுமனே சர்வதேச தினத்தில் பெண்களைக் கொண்டாடுவதால் மாத்திரம் பெண்களின் உரிமைகளைப் பெற்று விட முடியாது. அரசியலில் 25 வீதம் பெண்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்ற நிலை இருக்கின்றது. ஆனால் அது உள்ளுராட்சி தேர்தல்களில் மாத்திரமே அது நடைமுறையில் இருக்கின்றது. நாடாளுமன்றத்தில் அந்த நிலை இல்லை. அதனை கொண்டுவர வேண்டும்.
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் தமிழ் முற்போக்கு
கூட்டணி சார்பாக மலையக மக்கள் முன்னணி உறுப்பினர் ஒருவர் வெற்றி பெறுவார்.
அதற்கான முழு ஒத்துழைப்பையும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம் ஆகியோர் எமக்கு
வழங்குவார்கள் என்ற நம்பிக்கை இருக்கின்றது” எனவும் தெரிவித்துள்ளார்.

Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க காதல் திருமணம் தான் செய்வார்களாம்.. யாராலும் தடுக்க முடியாது! Manithan

போர் தொடர்பில் அப்படியே பலிக்கும் பாபா வங்காவின் கணிப்பு - ஈரான் இஸ்ரேல் போரில் வெற்றி யாருக்கு? News Lankasri
