அனோஜனுக்காக உருகிய மனம் ஏன் எங்களுக்காக உருகவில்லை! வீதியை மறித்து தேரர்கள் பொலிஸாருடன் முறுகல்
கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி, கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த தேரர்கள், வீதியைத் திறக்க அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்து வீதியின் நடுவே அமர்ந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஞானசார தேரரின் விடுதலை
இதன்போது, பொலிஸாருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேரர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், ஒவ்வொரு விகாரையிலிருந்தும் 50 பேர் கொழும்புக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ள பிக்குகள், ஞானசார தேரரின் விடுதலை தொடர்பில் தமது கோரிக்கையை வலியுறுத்தியுள்ளனர்.

அத்துடன், கொட்டும் மழைக்கு மத்தியிலும் வீதியின் நடுவே அமர்ந்த தேரர்கள் பிரித் பாராயணத்தில் ஈடுபட்டுள்ளனர். “ஞானசார தேரரை விடுவிக்காமல் இங்கிருந்து செல்வோம் என நினைக்க வேண்டாம்” எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, “அனோஜனுக்காக உருகிய மனம் ஏன் எங்களுக்காக உருகவில்லை?” எனவும் போராட்டக்காரர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
you may like this video
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri