கொட்டும் மழையில் ஞானசார தேரருக்காக வீதியில் இறங்கிய ராஜபக்ச தரப்பு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக்கோரி இடம்பெறும் பாதயாத்திரைக்கு பொதுஜன பெரமுன உள்ளிட்ட பல முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் ஆதரவு வழங்கியுள்ளனர்.
ஞானசார தேரரின் விடுதலையை வலியுறுத்தி கண்டியிலிருந்து கொழும்பு நோக்கி பாதயாத்திரை ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மகா சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த அமைதி வழிப் பேரணிக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் கட்சிகளும் தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.
முக்கிய அரசியல் பிரதிநிதிகள்
இன்று தேசிய சுதந்திர முன்னணிக் கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச, பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) மற்றும் சர்வஜன பலய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் உட்பட முக்கிய அரசியல் பிரதிநிதிகள் பலர் நேரில் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஞானசார தேரர் மீதான சிறைத்தண்டனை மற்றும் சிறையில் அவரது துறவற ஆடை அகற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் கடும் எதிர்ப்பை வெளியிடப்பட்டு வருகின்றது.
இவ்விடயத்தை பல அரசியல் கட்சிகள் அரசியல் பகடையாக பயன்படுத்துவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.
குறிப்பாக, ராஜபக்ச ஆட்சியின் போது அவர்களுக்கு மிக நெருக்கமாக இருந்த பிக்குகளில் பலர் இந்த பேரணி நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாகவும் வெலிபிட்டிய சாசன சங்கத்தின் தலைவர் ஹுகல ரத்னபால தேரர், பகிரங்கமாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
மனைவியுடன் சண்டையை தவிர்க்க 21 வது மாடியின் பால்கனியில் இருந்து இறங்கிய கணவன்: காத்திருந்த சோகம் News Lankasri